ஆடிப்பூரம் திருவிழா: ஆகஸ்ட் 1ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவதை ஒட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்கள் இடத்தில் ஆடிப்பெரும் திருவிழா, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசாணை எண் 154 பொதுத்துறை, 2009 இன் படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி 1. 08. 22 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளினை வீடு செய்திட 13 ஆகஸ்ட் சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை வெளியிட்ட உள்ள அறிக்கையில் , செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம்,மேல்மருவத்தூர் ஆதிபாராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூரம் திருவிழா 01.08.2022 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளத்தை முன்னிட்டு அரசாணை (நிலை) எண். 154 பொது (பல்வகை)த் துறை, நாள்.03.09.2009ன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, 01.08.2022 திங்கட்கிழமை அன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881 (Negotiable instruments Act 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை.
இந்த உள்ளுர் விடுமுறை நாளினை ஈடுசெய்திட 13.08.2022 சனிக்கிழமை அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மேல்மருவத்தூர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் திருக்கோவில் மிகப் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது இக்கோவிலில் ஆடிப்பூரம் திருவிழாவின் பொழுது பால் எடுத்தல், கஞ்சி கலயம் சுமந்து செல்லுதல் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருவது வழக்கம் .
இது மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடிப்பூர திருவிழா கலந்துகொள்ள வருவார்கள் என்பதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . இந்த உள்ளூர் விடுமுறை எப்பொழுது அதற்கு மாற்று ஏற்பாடாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி மற்ற அனைத்தும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்