மேலும் அறிய

ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது.

8,000 க்கும் மேற்பட்ட ரோபோ அறுவை சிகிச்சை

அப்போலோ மருத்துவமனைகள் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் ( எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை) உதவியுடனான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு அதி நவீன மற்றும் துல்லியமான சிகிச்சை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டா வின்சி Xi (da Vinci Xi), மேகோ (MAKO), ஹியூகோ ஆர்ஏஎஸ் (HUGO RAS), எஸ்எஸ்ஐ மந்திரா (SSI Mantra) மற்றும் சிஎம்ஆர் (CMR) உள்ளிட்ட உலகின் மிகச் சிறந்த நவீன தொழில் நுட்பக் கருவிகளைக் கொண்டு, ஒருங்கிணைந்த ரோபோடிக் அறுவை சிகிச்சைச் சூழலை அப்போலோ உருவாக்கியுள்ளது.

இந்த பன்முகத் தொழில் நுட்ப வசதியானது, நோயின் தன்மை, சிகிச்சையின் சிக்கலான நிலை மற்றும் நோயாளியின் தனிப்பட்ட உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ற மிகச் சரியான தொழில் நுட்பத்தைத் தேர்ந்தெடுக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது. இது அறுவை சிகிச்சையின் துல்லியம், பாதுகாப்பு மற்றும் வெற்றி விகிதத்தை அதிகரிக்கிறது.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் லிமிடெட்டின் நிர்வாகத் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி இது குறித்துப் பேசுகையில் ;

அப்போலோ மருத்துவமனைகளைப் பொறுத்தவரை நவீன தொழில் நுட்பம் என்பது எங்களது இறுதி இலக்கு அல்ல அதையும் தாண்டி இதுவரையில்லாத சிறந்த மருத்துவத் தீர்வுகளை அளிப்பதற்கும், நோயாளிகளின் சிகிச்சை அனுபவத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக பின்பற்றி வருகிறோம்.

நாங்கள் ரோபோடிக் சிகிச்சைகளுக்கான வசதிகளை விரிவுபடுத்தும் போது, சிகிச்சைகளில் துல்லியம், பாதுகாப்பு மற்றும் நோயாளிகளுக்கே முன்னுரிமை என்பதிலேயே எங்கள் முழுக் கவனமும் உள்ளது. 8,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறோம் என்பது, புதிய கண்டுபிடிப்புகள் மருத்துவரீதியாக அர்த்தமுள்ளதாகவும், பொறுப்புணர்வுடனும், அதே சமயம் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் எங்கள் மருத்துவர்களுக்கு அதிகத் துல்லியத்தையும் பெரும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அதே வேளையில் நோயாளிகள் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் குணமடைய உதவுகிறது என கூறினார்.

அப்போலோ மருத்துவமனைகளின் உத்திசார் செயல்பாட்டுப் பிரிவு இயக்குனர் திருமதி சிந்தூரி ரெட்டி கூறுகையில் ;

அப்போலோ மருத்துவமனைகளில் ரோபோடிக் சிகிச்சையானது சிறுநீரகவியல் , மகளிர் மருத்துவம் , பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை , குடல் மற்றும் மார்பு அறுவை சிகிச்சை , எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை , புற்றுநோயியல் மற்றும் இதய மருத்துவம் எனப் பல்வேறு சிறப்பு மருத்துவ பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் 30 முதல் 40 சதவீதம் மிக சிக்கலான மருத்துவ நடைமுறைகள் இப்போது ரோபோடிக் முறையிலேயே செய்யப்படுகின்றன. இது மாநிலத்திலேயே அதிக பட்ச விகிதங்களில் ஒன்றாகும்.

ரோபோடிக் அறுவை சிகிச்சை - 50 % குறைவான இரத்த இழப்பு 

வழக்கமான அறுவை சிகிச்சைகளை விட, ரோபோடிக் முறையில் செய்யப்படும் சிகிச்சைகளில் 50% வரை குறைவான ரத்த இழப்பு ஏற்படுவதாகவும், நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நாட்கள் 1-2 நாட்கள் வரை குறைவதாகவும், அவர்கள் மிக விரைவாகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதாகவும் மருத்துவ முடிவுகள் தெரிவிக்கின்றன

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
TN Budget 2026: தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
Tamil Nadu Budget 2026: இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் வெளியான மாஸ் அப்டேட்!
இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் மாஸ் அப்டேட்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Embed widget