(Source: ECI/ABP News/ABP Majha)
நில அபகரிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிணை மனு தள்ளுபடி
ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் மகேஷ். இவர், கடந்தாண்டு ஜூனில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரில், எனக்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அபகரித்து கொண்டார். அவர் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இம்மாதம் 24ம் தேதி, ஜெயகுமார் உள்ளிட்ட மூவர் மீதும், கூட்டுசதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இரு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள ஜெயகுமாரை, ஆலந்துார் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் வைஷ்ணவி முன், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் இருபத்தி 28 தேதி ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கறிஞர் மூலமாக செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து நேற்று விசாரணைக்கு வந்தபோது விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அந்த மனு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்குமார் மீதான ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புகார்தாரர் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜாமினில் வெளியே விட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும், சாட்சிகளை கலைத்து விட வாய்ப்பு என தனது வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், ஜெயகுமார் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர், அமைச்சராக இருந்தபோது, திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் பகுதியைச் சேர்ந்த, 83 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் மோசடி செய்துள்ளார் என, புதிய புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகி உள்ளது. நடவடிக்கை எடுப்பது பற்றி, சட்ட வல்லுனர்களுடன், போலீசார் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறுகையில், ''முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது, குடிசை மாற்று வாரியத்தின் வீடு ஒதுக்கீடு செய்ததில், முறைகேட்டில் ஈடுட்டார் என, புகார் வந்துள்ளது; விசாரித்து வருகிறோம்,'' என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்