மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : பட்டு சேலையில் நேர்த்தியாக செஸ் போர்டு.. காண்பவர்களை கவரும் புடவை.. இதுதான் சுவராஸ்யம்..
புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டு சேலையில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணம் பொருந்திய செஸ் போர்டு பட்டு சேலை நெய்ந்து நெசவாளர் விழிப்புணர்வு. பிரத்யேக விழிப்புணர்வு பட்டு சேலையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விளையாட்டு போட்டியை பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளிடையே பிரபலப்படுத்தும் விதமாக தமிழக முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் செஸ் போட்டி விழிப்புணர்வாக பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில் பட்டுக்கு புகழ் பெற்ற காஞ்சி பட்டு புடவையில் நெசவாளர் 35 நாட்களாக இரவு பகல் பாராமல் செஸ் போர்டு இருப்பது போல கருப்பு மற்றும் வெள்ளை கட்டங்கள் கட்டி நேர்த்தியாக நெய்ந்து இரு புறமும் பட்டு சேலை பார்டர் அமைத்து பட்டு சேலைகளில் செஸ் போர்டு விழிப்புணர்வை செய்ததை காண்பவரை மெய் சிலிர்க்க வைத்தது. இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி பட்டு சேலைகளில் செஸ் போட்டி விழிப்புணர்வை செய்த பட்டு சேலையை வெளியிட்டார்.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பட்டு சேலை விற்பனையாளர் பட்டு சேலை விற்பனை செய்வதில் நூறாண்டு நோக்கி சென்று வருவதால் பொதுமக்களுக்கு கவனத்தை ஈர்க்கவும், இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது ஒலிம்பியா செஸ் போட்டி நடைபெறுவதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரத்தியேகமாக செஸ் போர்டு இருக்கும் கருப்பு மற்றும் வெள்ளை கட்டங்கள் இருக்குமாறு பட்டு சேலை நெய்து பொதுமக்கள் பார்வைக்காக வைப்பதற்காக தனியார் பட்டு சிலை உரிமையாளர் வசந்த் ராஜ் தெரிவித்தார்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Chess olympiad 2022: இந்தியாவுக்கு முக்கியமான நாள்.. தொடர் வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுமா இந்தியா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion