மேலும் அறிய

Kanchipuram: ஓசியா ஜூஸ் வேணும்..! அட்ராசிட்டியில் ஈடுபட்ட 4 பெண் காவலர்கள்.. சிசிடிவி காட்சிகள் வெளியானதால் நடவடிக்கை..

மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை ஓசியில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஜூஸ் கடைக்கு சென்று உள்ளனர். 

மேலும் கடையில் இருந்த விற்பனையாளர்களிடம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவலர்களும் ஜூஸ் ,பிரட் ஆம்லெட், சாக்லேட், குடிநீர் கேன்கள் போன்றவற்றை ஓசியில் கேட்டு, தகராறில் ஈடுபட்டதோடு கடை உரிமத்தையும் ரத்து செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது சம்பந்தமாக கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையில் ஜூஸ் கடையில் இரவு பணியில் ஈடுபட்ட நான்கு காவலர்களும் பொருட்கள் கேட்டு ரகளையில் ஈடுபட்டது உறுதியானது. 

இதனையடுத்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஜெயமாலா உள்ளிட்ட நான்கு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தற்போது உத்தரவு அளித்துள்ளார். இவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஓசியில் ஜூஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட காரணத்தால் நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
Embed widget