மேலும் அறிய
Advertisement
kanchipuram: மண்டபத்தில் இருந்து வண்டிய காலேஜுக்கு விடுங்க..எக்ஸாம் இருக்கு...மணக்கோலத்தில் வந்த பெண்..!
திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியான புதுமணப்பெண்ணை தேர்வு எழுத வைப்பதற்காக இருவரும் மணக்கோலத்தோடு மணமகனே தேர்வு மையமான தனியார் கல்லூரிக்கு காரில் அழைத்து வந்து தேர்வறைக்கு அனுப்பி வைத்தார்.
மணக்கோலத்தில் தேர்வும் - விமர்சனமும்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மணக்கோலத்தில் பெண்கள் தேர்வு எழுதி வருவது பல்வேறு வகையில் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒருபுறம் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, திருமணம் முடிந்த கையோடு பெண்கள் தேர்வு எழுத வருவதை சிலர் பாராட்டி வந்தாலும், சமூக வலைதளத்தில் இதுபோன்று மாலை அணிந்து கொண்டு, நகைகள் அணிந்து கொண்டு தேர்வு எழுத வருவது எந்த விதத்திலும் சரி இல்லை என கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் மணக்கோலத்தில் பெண்கள் தேர்வு எழுத வருவது தொடர் கதையாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் மேற்றொரு சம்பவம்
இந்த நிலையில் மற்றொரு சம்பவமாக காஞ்சிபுரத்திலும் மணக்கோலத்தில் பெண் ஒருவர் தேர்வு எழுத வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒட்டிவாக்கம் கோபி- வேண்டா தம்பதியரின் மகள் கிருத்திகா. இவர் காஞ்சிபுரம் கீழம்பி பகுதியிலுள்ள தனியார் மகளிர் கல்லூரி இளங்கலை தமிழ் மூன்றாம் படித்து வருகிறார். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வயலூர் பகுதியை சேர்ந்த முத்து-அஞ்சளா தம்பதியரின் மகன் மகேந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்டது.
திருமணம் முடிந்த கையோடு
இந்த நிலையில் மணமகள் கிருத்திகாவிற்கு கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு செமஸ்டர் தேர்வு தொடங்கிய நடைபெற்றுவரும், நிலையில், இன்று இறுதி தேர்வாக கணிதம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. திருமண தேதி இன்று உறுதியான நிலையில், இருவருக்கும் திருமணமானது, காலை 7.30 -9.00 மணியளவில் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியான புதுமணப்பெண்ணை தேர்வு எழுத வைப்பதற்காக இருவரும் மணக்கோலத்தோடு மணமகனே தேர்வு மையமான தனியார் கல்லூரிக்கு காரில் அழைத்து வந்து தேர்வறைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion