மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : பட்டப்பகலில் நடந்த கொலை ..! கஞ்சா போதையால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்..! மக்கள் அதிர்ச்சி
incident of the hacking of a DMK official from Kanchipuram, Bhubalan, has caused great shock
2021 இல் நடந்த சம்பவம்
காஞ்சிபுரம் மாநகராட்சி மிலிட்டரி ரோடு, ஓரிக்கை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன். சொந்தமாக கார் வைத்துக் கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். பூபாலன் திமுகவில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு , காஞ்சிபுரம் கணேஷ் நகரைச் சேர்ந்த மோகன் ( 25). இவரது நண்பர் சத்யா நகர் பாலாஜி ( 24) . ஆகியோர் சேர்ந்து பூபாலனின் உறவினரான சத்யா நகரில் வசிக்கும் கார்த்திகேயன் (42) என்பவரின் மகனை பாலாஜி போதையில் தகராறு செய்து, கார்த்திகேயனின் மகனை கண் மூடி தனமாக தாக்கியுள்ளனர்.
மோகன் உயிரிழப்பு
இதை பார்த்த பூபாலன் பாலாஜியை வழிமறித்து, என் மகனை எதற்கு அடித்தாய்? என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில், , மீண்டும் கஞ்சா போதையில் வந்த பாலாஜி, மோகன், செல்வம் ஆகிய மூன்று பேர் பூபாலன் வீட்டு வாசலில் நிற்க வைத்திருந்த நான்கு கார்களின் கண்ணாடிகளை, அடித்து உடைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பூபாலன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கே இருந்த கார்த்திகேயன் மற்றும் பூபாலன் ஆகிய இருவரையும் மோகன், பாலாஜி ஆகியோர் தாக்கியுள்ளனர். மேலும் கார்த்திகேயன், பூபாலன் ஆகியோர் இணைந்து, தற்காப்புக்காக மோகன் பாலாஜியை தாக்கிய பொழுது, மோகன் தலையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காத்திருந்த நண்பர்கள்
இந்த நிலையில் உயிரிழந்த மோகன் என் நண்பர்களான, விக்கி என்கிற விக்னேஷ், தொடர்ந்து, கஞ்சா போதையில் பூபாலனிடம் அவ்வப்போது சண்டைக்கு செல்வதும், அவரை மிரட்டுவதும் என திரிந்து வந்துள்ளனர். தொடர்ந்து, நண்பன் உயிர் இழப்பு காரணமான, பூபாலனை கொலை செய்ய காத்திருந்த திட்டம் தீட்டி வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று, பூபாலன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொழுது, எதிரே மோட்டார் சைக்கிளில், வந்த மூன்று மர்ம நபர்கள் திடீரென பூபாலனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
பரிதாபமாக உயிரிழந்த பூபாலன்
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பூபாலனை, உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பூபாலன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பழிதீர்த்த நண்பர்கள்
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் காஞ்சிபுரம் மந்தைவெளி பகுதியைச் சார்ந்த செல்வம் என்பவரும் அவரது நண்பர்களான விக்கி, சரவணன், தேவேந்திரன் ஆகிய நால்வரும் சேர்ந்து பூபாலனை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மறைவிடத்தில் பதுங்கி இருந்த செல்வத்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்புடைய விக்கி, சரவணன், தேவேந்திரன், ஆகிய மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குட்டி ரவுடிகளின் அட்டகாசம்
கஞ்சா போதையில் பட்டப்பகலில் நடைபெற்ற, அரிவாள் வெட்டு சம்பவத்தால் காஞ்சிபுரம் மிலிட்டரி ரோடு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து காஞ்சிபுரம் பகுதியில் கஞ்சா பகுதியில் பல குற்றங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இது போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வரும், குட்டி ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருவதால் நகர் பகுதியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. குட்டி ரவுடிகள் பலரும் கஞ்சா மற்றும் பிற போதையில் பழக்க வழக்கங்களில் அடிமையாகி, தொடர்ந்து குற்ற சம்பவங்கள் ஈடுபடுவதும், தங்களுடைய ஏரியாக்களில், பெரிய ஆட்களாக காட்டிக்கொள்ள கொலை சம்பவங்களின் ஈடுபடுவதும் தொடர்கதை ஆகியுள்ளது . காவல்துறையினர் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிப்பது , அவர்களை கைது செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டாலும், இது போன்ற குட்டி ரவுடிகளை கண்டு கொள்வதில்லை எனவும், அவ்வாறு கண்டுகொள்ளாததால், தான் இது போன்ற கொலை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுகின்றன. முளையிலேயே இதுபோன்ற நபர்களை கிள்ளி எறிய வேண்டும் என்பதே காஞ்சி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion