காஞ்சிபுரம் மாநகராட்சியில் அடுத்த பிரச்சினை.. உள்ளிருப்பு போராட்டத்தில் கவுன்சிலர்கள்.. என்ன நடக்கிறது அங்கே ?
kanchipuram mayor news : திமுக மேயருக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயலடும் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகனை மாற்றும் வரை காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் திமுக மேயருக்கு எதிரான எதிர்ப்பு கவுன்சிலர்கள் கூட்டாக காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்
காஞ்சிபுரம்மேயர் மகாலட்சுமி யுவராஜ்
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வெடித்த பிரச்சனை
மேயர் தேர்தலில் வெற்றி பெற்று மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் மேயராக பதவி ஏற்றார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருநாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னதான் பெரும்பான்மையை நிரூபித்து காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது. ஒவ்வொரு முறை மாமன்ற கூட்டம் நடைபெறுகின்ற பொழுதும், கூட்டம் சலசலப்புடன் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வருகின்ற 29ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து, விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது
திடீர் போராட்டம்
இந்தநிலையில் திடீர் போராட்டத்தை காஞ்சிபுரம் மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்கள் கையில் எடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி 20க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்களின் வருகையை , அதற்கென உள்ள வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12ந் தேதியன்று நடத்தப்பட்டு மாமன்ற கூட்டத்தில் மேயராக எதிராக போர் கொடி தூக்கிய எதிர்ப்பு மாமன்ற உறுப்பினர்கள் அக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்து , வெளிநடப்பு செய்திருந்த நிலையில்,அன்றைய தினம் நடத்தப்பட்ட மாமன்ற கூட்டத்திற்கு வருகைப் பதிவேட்டில் மாமன்ற உறுப்பினர்கள் வரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கையெழுத்திட்டு தர வேண்டும்
குறிப்பாக அன்றைய தினம் நாங்கள் கூட்டதில் கலந்து கொண்டு கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்ததை எழுத்து பூர்வமாக எழுதி தாங்கள் கையெழுத்திட்டு தர வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் மாநகராட்சி ஆனையரை என்னால் எதுவும் செய்ய முடியாது அதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை,வருகைப் பதிவேட்டின் அதிகாரம் மேயருக்கு தான் உள்ளது என திட்டவட்டமாக தெரிவித்தார் .
காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்
இதனையடுத்து திமுக மேயருக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக மாநகராட்சி ஆணையர் செயல்படுவதை கண்டித்து எதிர்ப்பு மாமன்ற உறுப்பினர்கள் தற்போது மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று முறை மாமன்ற கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர்கள் வரவில்லை என வருகைப் பதிவேட்டில் குறிபிட்டு இருந்தால் மாமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
இந்நிலையிலேயே இரு முறை வரவில்லை என வருகைப்பதிவேட்டில் தவறாக குறிப்பிட்டுள்ளதற்கு விளக்கம் கேட்டும்,அ தனை சரி செய்திடவும்,மாநகராட்சி ஆனையரை கண்டித்தும்,ஆனையரை மாற்றிடக்கோரியும், திமுக மேயருக்கு எதிரான எதிர்ப்பு மாமன்ற உறுப்பினர்கள் 33பேர் கூட்டாக ஒன்று சேர்ந்து , காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.