காஞ்சிபுரம் : பள்ளிச் சிறுவன் இடி தாக்கி உயிரிழப்பு.. பதைபதைத்த மக்கள்.. சோகத்தில் ஆழ்ந்த மாவட்டம்
காஞ்சிபுரம் வையாவூர் அருகே பள்ளிச் சிறுவன் இடி தாக்கி உயிரிழப்பு .
காஞ்சிபுரம் வையாவூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். ஒரகடத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து இவருக்கு அஞ்சலி எனும் மனைவியும்,9-ஆம் வகுப்பு படிக்கும் பவித்திரன்,7-ஆம் வகுப்பு படிக்கும் நத்தகுமார்(13) என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இளைய மகன் நந்தகுமார் வையாவூர் அரசு பள்ளியில் பயின்று வரும் இவர் இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இடியுடன் கூடிய கனமழையானது பெய்தது.இதனையெடுத்து வீட்டிற்கு சென்ற நந்தகுமார் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் வயல்வெளியில் மழையில் நினைந்தவாறு இருந்துள்ளது.
இதனை கண்ட நந்தகுமார் கால்நடைகள் அழைத்து வர சென்ன நிலையில் இடிதாக்கி நிகழ்விடத்திலேயே கீழே விழுநுதுள்ளார்.அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு அவசர ஊர்த்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்திவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது நந்தகுமார் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரத்தில் பெய்த மழை
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், முன்பு எப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக சுமார் 114 டிகிரி வெப்பநிலை வரையில் கோடை வெயில் பதிவாகி அனைவரிடத்திலும் கடும் சிரமத்தை ஏற்படுத்தி இருந்தது.
தமிழகத்தில் இம்முறை முன்பு எப்போதும் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடை வெப்பநிலை பதிவாகியுள்ளது.இந்த கடும் கோடை வெயிலினால் பொது மக்கள்,வாகன ஓட்டிகள்,சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பொது மக்கள் பலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி கத்திரி வெயிலின் தாக்கம் வெளிவர தொடங்கியது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளான இன்று காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் அனைவரையும் வாட்டி வதைத்து வந்த நிலையில் மதிய வேளைக்கு பிறகு எதிர்பாராத விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமதுப்பேட்டை,பேருந்து நிலையம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,பெரியார் நகர்,பொன்னேரிக்கரை ,சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம்,ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழந்து சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்யத்தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கன மழையானது வெளுத்து வாங்கியது.
கன மழையினால் சாலைகளில் மழை வெள்ள நீர் கரைப்புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
மேலும் வெளுத்து வாங்கிய இந்த திடீர் கன மழையினால் அக்னி நட்சத்திரம் முதல் நாள் கத்திரியின் வெயிலின் வெப்பம் தணிந்து
குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கன மழையினால் நீர்நிலைகளும் சற்று கணிசமாக உயரும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.