மேலும் அறிய
Advertisement
தேசிய விருது பெற்ற காஞ்சி கேன்சர் சிறப்பு மருத்துவர்...இந்தியாவிலேயே முதல் மதிப்பெண்..!
காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை மருத்துவர் தேசிய விருது பெற்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (37). இவர் கேன்சர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம், பொன்னேரி கரை அடுத்துள்ள காரப்பேட்டையில் செயல்பட்டு வரும், அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணி புரிகிறார்.
மேலும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட தன் பாட்டியின், நினைவாக கிராமப்புற மக்கள் எளிதாக அணுகும் முறையில் " கங்கா கேன்சர் கேர் " என்ற புற்றுநோய்க்கான ஆலோசனை மையத்தை காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைத்து ஆலோசனை வழங்கி வருகிறார். பொது மக்களுக்கு புற்று நோயிலிருந்து எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும், எந்த மருத்துவமனை நாட வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி புதுடெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில், தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் முகவாண்மை நடத்திய 21ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் மன்சூக் மாண்டவியா, இணை அமைச்சர் மருத்துவர் பிரவீன் பவார், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் கிரிநாத் ஆகியோர் மருத்துவர் பாலமுருகனுக்கு தேசிய விருது மற்றும் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கினர்.
நீட் மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசு நிறுவனமான புதுடில்லி தேசிய தேர்வுகள் முகவாண்மை நடத்திய 2021ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான தேர்வில், புற்றுநோய் அறுவை சிகிச்சை உயர் சிறப்பு பிரிவில் மருத்துவர் பாலமுருகன் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்தியாவிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையில், அரசு மருத்துவ கல்லுாரியில் பயின்று, அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருப்பது தமிழகத்தில் முதல் முறையாகும். தேசிய விருது பெற்று பாலமுருகனை, சக மருத்துவர்கள், கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion