Chengalpattu: அரசு மருத்துவமனைக்கு தரம் குறைவான பாராசிட்டமால் - நிறுவன இயக்குனர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை
பாராசிட்டமால் மாத்திரையின் தரத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தார். அப்பொழுது பாராசிட்டமால் தரம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் பகுதியில் சிபிகாட் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஏராளமான மாத்திரைகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனத்தில் தயார் செய்யப்படும் மருந்துகளை தமிழக அரசும் கொள்முதல் செய்தது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்த கொள்முதல், செய்யப்பட்ட மருந்துகள் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த தனியார் நிறுவனம் அமைந்திருந்தது, தற்பொழுது மாவட்டம் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில், இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து, பாராசிட்டமால் மருந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைக்கு, 2006 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தாம்பரம் அரசு மருத்துவமனையில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ஆய்வு செய்த காஞ்சிபுரம் சரக மருந்து ஆய்வாளர் பாராசிட்டமால் மருந்து விநியோகம் செய்யப்பட்டு இருப்பதை ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஆய்வு மேற்கொண்டதில் பாராசிட்டமால் மருந்து விநியோகம் செய்யப்பட்டது. தரம் குறைவாக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பாராசிட்டமால் மாத்திரையின் தரத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தார். அப்பொழுது பாராசிட்டமால் , தரம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தரம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு இதுகுறித்து மருந்துகள் வழங்கிய நிறுவனத்தின் இயக்குனர்கள் மகேந்திரா பி ஜெயின் மற்றும் ராஜேஷ் பீசையின் மற்றும் அந்த நிறுவனத்தின் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து விசாரணையானது செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ முன் விசாரணை நடைபெற்று வந்தது. 2008 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி இருந்தார். இறுதி விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நிறுவன இயக்குனர்கள் மகேந்திரா பி ஜெயின் மற்றும் ராஜேஷ் பிஜிஎம் ஆகியோருக்கு மூன்று வழக்குகளிலும் தலா ஓராண்டு சிறை தண்டனையும் தலா 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. நிறுவன இயக்குனர்கள் மற்றும் நிறுவனம் ஆகிய மூவரும் இணைந்து சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனவும் அந்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்