மேலும் அறிய
Advertisement
மொட்டை மாடியில் துணி எடுக்கச்சென்ற பெண்.. இடி விழுந்து உயிரிழப்பு.. காஞ்சிபுரத்தில் பரிதாபம்..
காஞ்சிபுரத்தில் , வீட்டின் மொட்டை மாடியில் காய வைத்த துணியை எடுக்கச் சென்ற பெண் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு வீரசிவாஜி தெருவில் வசிப்பவர் மோகன்தாஸ், இவருக்கு இளவரசி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும், உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய திடீர் மழை பெய்தது. திடீரென மழை வந்ததால் மோகன்தாஸின் மனைவி இளவரசி வீட்டின் மொட்டை மாடியில் காய வைத்த துணியை எடுக்கச் சென்றார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக பயங்கரமாக இடிதாக்கி இளவரசி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிய மோகன்தாஸ் இடி தாக்கி மயங்கி விழுந்து கிடந்த தனது மனைவி இளவரசியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு இளவரசியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர். சம்பவம் குறித்து அறிந்த தாலுகா போலீசார் இடிதாக்கி உயிரிழந்த இளவரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் மொட்டை மாடியில் காய வைத்த துணியை எடுக்கச் சென்ற பெண் இடிதாக்கி உயிரிழந்த சம்பவம் திருக்காலிமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மழை
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள ஓரிக்கை, பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து பெய்தது வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில் மழை பெய்து வெப்பம் குறைந்துள்ளதாகவும், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர் . இருப்பினும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளக்குளி பெருமாள் கோவில் தெரு மேட்டு தெரு கீரை மண்டபம் மூங்கில் மண்டபம் மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் , அதிக மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.
இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் அந்த பகுதிகளில் கடப்பதற்கு பத்து நிமிடத்திற்கு மேல் ஆகுவதாகவும், அதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் இதுபோன்ற அவ்வப்போது நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை உடனடியாக சரி செய்து மழைநீர் தேங்காாமல் மாநகராட்சி பார்த்துக் கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion