மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம்: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 4 கோடி மதிப்புள்ள 25,000 நெல் மூட்டைகள் வீணானது
’’மழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிடங்கு மேலாளர் மண்டல மேலாளருக்கு கடிதம் எழுதிய நிலையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது அம்பலம்’’
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள கட்டவாக்கம் பகுதியில், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் திறந்தவெளி நெல் சேமிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு, தென்னேரி, கட்ட்டவாக்கம், ஐம்பொன்சேரி பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1 லட்சத்து 51 ஆயிரத்து 254 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கடந்த 4 மாதங்களாக அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 மணி நேரமாக பெய்த தொடர் மழை காரணமாக திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வரும் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கி காலை 8 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 7 மணி நேரத்துக்கு மேலாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி, திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்படும் குடோன்களுக்கு மாற்றம் செய்யாமல் இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பெய்யும் மழை காரணமாக கட்டவாக்கம் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும், மேற்பட்ட மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக அரசுக்கு நேரடியாக 4 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இரண்டு மடங்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது . இதன் எதிரொலியாக தற்போது கட்டவாக்கம் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் ஒரு மடங்கு கூடுதலாக சேமிப்பு வைக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திறந்தவெளி சேமிப்பு கிடங்கு என்பதால், காற்று உள்ளிட்ட காரணங்களாக மேலே போற்றப்படும் , தார்ப்பாய் உள்ளிட்டவை கிழிந்து விடுகிறது. இதன் காரணமாகவே நெல் மூட்டைகள் நினைந்து வீணாகின்றன எனத் தெரிவித்தனர்.
அலட்சியத்தால் வீணான நெல் மூட்டைகள்
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டவாக்கம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் கடந்த 4 மாதங்களாக நெல் மூட்டைகளை சேமித்து வைத்து இருப்பதால் புயல் அல்லது மழை வந்தால் அதை பாதுகாக்க முடியாது. எனவே இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை மற்றும் உத்தரவை பிறப்பிக்க கோரி கிடங்கு மேலாளர் பலமுறை மண்டல மேலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதத்தின் மீது மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்காத காரணத்தாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் நேருவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதேபோல 30க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு போதிய அளவிலான சேமிப்பு கிடங்குகள் இல்லாத காரணத்தினால் திறந்த வெளியிலேயே வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. முறையான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால், இது போன்ற நிலை நீடிப்பதாக தெரிவித்தார். அரசுப்பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாததால் விவசாயிகள் பாடுபட்டு உருவாக்கிய நெல்மணிகள் தற்போது வீணாகியுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion