(Source: ECI/ABP News/ABP Majha)
காஞ்சிபுரம் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி! விடுமுறை அறிவித்த ஆட்சியர்! காரணம் என்ன?
kanchipuram kachabeswarar temple kumbabishekam காஞ்சிபுரத்தில் நாளை அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு முன்னிட்டு 11 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு 01.02.2024 அன்று நடைப்பெறுவதை முன்னிட்டு இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், இக்கோயிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள
1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி,
2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
3.அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம்,
4.தி/ள்அந்திரசன் பள்ளி,
5.தி/ள்பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி,
6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி மற்றும்
9. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள்,
10ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும்
11. தி/ள்அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேற்படி பள்ளிகளுக்கு 01.02.2024 அன்று மேற்படி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்கலைச்செல்விதெரிவித்துள்ளார்கள்.