மேலும் அறிய

Kalakshetra Row: பாலியல் குற்றச்சாட்டு; மாணவிகள் போராட்டத்தால் ஏப்.6-ந் தேதி வரை கலாஷேத்ரா கல்லூரி மூடல்

கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கல்லூரி வரும் 6-ஆம் தேதி வரை மூடப்படுவதாக கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். 

பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கல்லூரி வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை மூடப்படுவதாக கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். 

இரண்டு நாட்களில் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம்  உத்தரவிட்டுள்ளது.  கல்லூரி மூடப்படும் நாட்களில் தேர்வுகள் இருந்தால் ஒத்திவைக்கப்படும் என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு:

சென்னை திருவான்மியூரில் காலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி கல்லூரி கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படுகிறது. பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை சேர்ந்த பல முக்கிய கலைஞர்களை நம் நாட்டிற்கு வழங்கிய பெருமை இந்த நிறுவனத்திற்கு உண்டு. இதனால், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, கலாஷேத்ரா தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இங்கு பல பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் உள்ள ஆசிரியர் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது வதந்தி என்று கூறப்பட்டு வந்தது. கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாப்பாத்திங்களில் நடிக்க வேண்டுமானால், ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஆசிரியர் மிரட்டியதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாணவிகளுக்கு தடை:

ஒருவருக்கு வாய்ப்பை வழங்கவும், தடுக்கவும் முடியும் அளவிற்கு அந்த ஆசிரியருக்கு கலாஷேத்ராவில் அதிகாரம் உள்ளதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது, மாணவிகள் கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரனிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் கலாஷேத்ராவின் பெருமையைச் சீர்குலைக்கும் விதத்தில் பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதைகள் என்றும், இனி மாணவர்கள் இச்சம்பவம் குறித்துப் பேசவோ, இணையத்தில் கருத்துகள் பகிரவோ கூடாது என்றும் கலாஷேத்ரா நிர்வாகம் மாணவிகளுக்கு தடை விதித்ததாகவும் தகவல்கள் கிடைத்தன. 

c.a.r.e.spaces மூலம் புகார்:

மாணவிகள் எந்த ஆசிரியருக்கு எதிராக புகார் அளித்தனரோ அந்த நபர், சர்வதேச மகளிர் தினத்தன்று கலாஷேத்ராவில் கவுரவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகுதான், இந்தியக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 'கேர்ஸ்பேசஸ்' (c.a.r.e.spaces) எனும் அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவிகள், கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தற்போது பயின்று வருபவர்கள் மட்டுமின்றி, முன்னாள் மாணவர்கள் பலரும் பாலியல் புகார்களை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆதாரங்களை திரட்டிய 'கேர்ஸ்பேசஸ்' அமைப்பு, தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்தது.

தேசிய மகளிர் ஆணையம் புகார்

”கேர்ஸ்பேசஸ்” அமைப்பு வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம், தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்தது. அதில், ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். 

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட 24 வயது மாணவி ஒருவர், தனது பெயருக்கும், கல்லூரியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக, வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில், அடையாறு அனைத்து மகளிர் காவல் அதிகாரி விசாரணை நடத்தி மேற்கொண்டனர். 

கலாஷேத்ரா விளக்கம்

இந்நிலையில் பாலியல் அத்துமீறல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா அமைப்பு சார்பில், பத்திரிகை தகவல் பணியகம் விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ”சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள் புகார் விசாரணைக் குழு மூலமாக கடந்த இரண்டரை மாதங்களாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவோ, தாக்கப்பட்டதாகவோ எந்த மாணவியும் வாக்குமூலம் அளிக்கவில்லை. தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே வதந்திகள் மட்டுமே. தேவைப்பட்டால் தேசிய மகளிர் ஆணையம் நேரில் வந்து விசாரணையை மேற்கொள்ளலாம்” எனவும் கலாஷேத்ரா அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது உள் புகார் விசாரணைக் குழு அமைப்பின் அறிக்கையை, டிஜிபி அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கலாஷேத்ரா தெரிவித்துள்ளது. 

திரும்ப பெறப்பட்ட உத்தரவு

பாலியல் புகார் குறித்த விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு பிறப்பித்த உத்தரவை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப்பெற்றது. கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என நான்கு பேர் குழு அறிக்கை அளித்திருந்தது.

மாணவிகள் போராட்டம்

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். விசாரணை மேற்கொள்வதற்கான உத்தரவு திரும்ப பெறப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கல்லூரி மூடல்

மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, ருக்மணிதேவி கல்லூரி வரும் 6-ஆம் தேதி வரை கல்லூரி மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை நிலை கண்டறியப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
" சொத்துக்காக விஷ ஊசி போட்டு கொலை " மாரடைப்பு என நாடகம் !! இறுதியில் நடந்த சோகம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! இன்று மறந்தும் கூட மதியம் வெளில போயிடாதீங்க!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! மறந்தும் கூட மதியம் வெளில போயிடாதீங்க!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND
”ஊழல் பண்ண பதவி காலி” CM விஜய் வார்னிங்! பதறும் தவெக அமைச்சர்கள்
”வெயில்ல நிக்காம போறாரு” கேள்வி கேட்ட பொதுமக்கள் ESCAPE ஆன அமைச்சர் ஸ்ரீநாத்!
Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget