மேலும் அறிய

IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி இழந்த நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளும் மோதும் 2வது போட்டி இன்று கார்டிஃப்பில் நடக்கிறது.

தொடரை வெல்லுமா இந்தியா?

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

அணி விவரம்:

ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்ஷர் படேல், குர்னூர் ப்ரார், பும்ரா, பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ( கேப்டன்),  ஜோஸ் பட்லர், சாம்கரன், வில் ஜேக்ஸ், அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், ஷகீப் மகமூத் ஆகியோர் இங்கிலாந்து அணியில் களமிறங்கியுள்ளனர்.

யார்? யார்?

இந்திய அணியில் கே.எல்.ராகுல் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் உள்ளே வந்துள்ளார். இங்கிலாந்து அணியில் டங்க், கடந்த போட்டியில் அசத்திய டாவ்சன் உட்கார வைக்கப்பட்டு அட்கின்சன், ஷகீப் மகமூத் களமிறங்கியுள்ளனர்.

மைதானம் எப்படி?

புகழ்பெற்ற கார்டிப் மைதானத்தில் இதுவரை 33 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 8 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சேஸ் செய்த அணி 21 முறை வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 223 ரன்கள் எடுக்கும். 2வது பேட் செய்யும் அணி சராசரியாக 209 ரன்கள் எடுக்கும்.

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து வங்கதேசத்திற்கு எதிராக 386 ரன்கள் விளாசியுள்ளது. அதேபோல, இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 312 ரன்களை சேஸ் செய்துள்ளது. 169 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியை சுருட்டியும் இங்கிலாந்து இந்த மைதானத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சு முக்கியம்:

மைதானம் சேசிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதாலே இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். கடந்த போட்டியில் அசத்திய இந்திய கேப்டன் சுப்மன்கில் இந்த போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் பெரியளவில் சோபிக்காத முன்னாள் இந்திய கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். மிடில் ஆர்டரில் இஷன், ஸ்ரேயாஸ், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்ஷர்  பேடல் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.

பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் இந்த மைதானத்தில் இரு அணியில் எந்த அணி சிறப்பாக பந்துவீசுகிறதோ? அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகும். அதேசமயம், மைதானம் சேசிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணி இமாலய இலக்கை குவிக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர், அட்கின்சன், ஷகிப் மகமூத், சாம் கரன், அடில் ரஷீத் ஆகியோர் பந்துவீச்சு பலமாக உள்ளனர். இந்திய அணியில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சு பலமாக உள்ளனர்.

வானிலை தெளிவாக இருப்பதால் இன்றைய போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்காது என்றே கருதப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget