மேலும் அறிய
Advertisement
கலைஞர் நினைவு தினம்; பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணி.
முத்தமிழறிஞர் கலைஞர்
காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, என அனைத்து பகுதிகளிலும் கலைஞரின் நினைவு நாளை அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி
அதன்படி, பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக,மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏ , சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் என 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகில் இருந்து சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெரு திமுக மாவட்ட அலுவலகம் வரை அமைதியாக பேரணி சென்றனர். பின்னர் மாவட்ட அலுவலகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
மாவட்ட அவைதலைவர் இனியரசு மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகர அவைத் தலைவர் செங்குட்டுவன் ,துணை செயலாளர் முத்து செல்வன், ஜெகநாதன், பகுதி செயலாளர் கே, சந்துரு, திலகர், தசரதன்,வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார், ஒன்றிய செயலாளர்பி. எம் .குமார், சேகர், ஞானசேகரன், குமணன் ,படுநெல்லி பாபு அணிகளின் அமைப்பாளர் கள்,பேரூர் செயலாளர்கள் என ஏராளமானவர்கள் இந்த அமைதி கரையில் கலந்து கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion