மேலும் அறிய
Advertisement
செப்.15 காஞ்சிபுரத்தில் சம்பவம் செய்ய காத்திருக்கும் முதலமைச்சர்..! வெளியானது அதிரடி அறிவிப்பு..!
kalaignar magalir urimai scheme : " எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்திருந்த திட்டத்தை செப்டம்பர் 15 முதல் முதல்வர் துவங்கிவைப்பார் என காஞ்சிபுரத்தில் பேட்டி "
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று துவக்க உள்ளதால் இடத்தை அமைச்சர் தா.மோ அன்பரசு ஆய்வு மேற்கொண்டார்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ( kalaignar magalir urimai scheme )
குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இதற்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
எங்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவங்கப்பட உள்ளது ? ( kalaignar urimai thogai thittam )
இதற்கான விழா ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக நடத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டம் மேடை அமைக்க இடத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசு ஆய்வு மேற்கொண்டு இடத்தை பார்வையிட்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் : ”மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற மகளிருக்கு மாதம் ரூ.1000 ரூபாய் திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் அவரின் பிறந்தநாள் அன்று அவர் பிறந்த மண்ணில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காலை 10 மணி அளவில் துவக்கி வைக்கிறார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வந்த இந்த திட்டத்தை செப் 15 ஆம் தேதி அன்று முதல் திட்டம் தொடங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதனை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது” என சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.
ஆய்வு செய்யும் பணியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காவல் கண்காணிப்பாளர் சுதாகர், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தஞ்சாவூர்
ஜோதிடம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion