மேலும் அறிய

Kalaignar Park: சென்னையில் புதிய பொழுதுபோக்கு - பறவைகள், அருங்காட்சியகம், ஜிப்லைன் - கலைஞர் நூற்றாண்டு பூங்கா..!

Kalaignar Park: சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் பூங்காவை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Kalaignar Park: சென்னை கதீட்ரல் சாலையில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.46 கோடி செலவில், கலைஞர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் பூங்கா:

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக அவர்தம் பெயரில்,  சென்னை கோபாலபுரத்தில் கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா நிறுவப்பட்டுள்ளது. இது வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, "சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்" என்னும் அறிவிப்பை கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட நிலம்:

கலைஞர் பூங்கா அமைந்துள்ள இடம் முன்னர் ஒரு சங்கத்தின் கட்டுப்பாட்டில் தனியாரிடமிருந்தது.  நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசால் மீட்கப்பட்டு, அந்த இடம் தோட்டக்கலைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிலத்தில் சென்னை மாநகர மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவினை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 27.02.2024 அன்று அடிக்கல் நாட்ட்னார்.

பூங்காவில் உள்ள வசதிகள்:

இப்பூங்காவில், பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக அமைய திட்டமிடப்பட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம். 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனி மூட்டப்பாதை 2600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய  வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10000 சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை. அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை. மர வீடு, அருவி இசை நீரூற்று,  குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா 45 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்டுள்ளது.

நுழைவு கட்டண விவரங்கள்:

பூங்கா சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. பூங்கா அனுபவத்தினை என்றென்றும் நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது. இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100/- சிறியவர்களுக்கு - ரூ.50/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250/- சிறியவர்களுக்கு -ரூ.200/- குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- சிறியவர்களுக்கு - ரூ.75/- எனவும், மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு - ரூ.50/- எனவும், கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50/- எனவும், புகைப்பட கருவிகளுக்கு (camera) ரூ.100/- எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (video camera) ரூ.5000/- எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நுழைவுக்கட்டணங்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லதக்கது.

ஆன்லைன் டிக்கெட்:

இணையதளத்தின் வாயிலாக நுழைவுகட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினை https://inhorticulture.in/Kopertickats பெறவாம். கியூஆர் கோட் வழியாகவும் நுழைவுச் சீட்டினை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவுற்றுள்ள நிலையில்,  அதனை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: ”கேட்டதற்கு மேலே செய்து கொடுத்தோம்” சென்னை வான் சாகச நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
Chennai Air Show 2024: ”கேட்டதற்கு மேலே செய்து கொடுத்தோம்” சென்னை வான் சாகச நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Kalaignar Park: சென்னையில் புதிய பொழுதுபோக்கு - பறவைகள், அருங்காட்சியகம், ஜிப்லைன் - கலைஞர் நூற்றாண்டு பூங்கா..!
Kalaignar Park: சென்னையில் புதிய பொழுதுபோக்கு - பறவைகள், அருங்காட்சியகம், ஜிப்லைன் - கலைஞர் நூற்றாண்டு பூங்கா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: ”கேட்டதற்கு மேலே செய்து கொடுத்தோம்” சென்னை வான் சாகச நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
Chennai Air Show 2024: ”கேட்டதற்கு மேலே செய்து கொடுத்தோம்” சென்னை வான் சாகச நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Kalaignar Park: சென்னையில் புதிய பொழுதுபோக்கு - பறவைகள், அருங்காட்சியகம், ஜிப்லைன் - கலைஞர் நூற்றாண்டு பூங்கா..!
Kalaignar Park: சென்னையில் புதிய பொழுதுபோக்கு - பறவைகள், அருங்காட்சியகம், ஜிப்லைன் - கலைஞர் நூற்றாண்டு பூங்கா..!
Bullet Proof Jacket: போர் பதற்றம், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் பாதுகாப்பானவையா? எந்த தோட்டா மிக ஆபத்தானது?
Bullet Proof Jacket: போர் பதற்றம், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் பாதுகாப்பானவையா? எந்த தோட்டா மிக ஆபத்தானது?
Breaking News LIVE 7 Oct :  ஐபிஎல் ஏலத்துக்காக நகரங்களை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரம்
Breaking News LIVE 7 Oct : ஐபிஎல் ஏலத்துக்காக நகரங்களை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரம்
IAS Officer Bisleri: பிஸ்லெரிக்கு பதிலாக பில்செரி வாட்டர் பாட்டில், கடுப்பான ஐஏஎஸ் அதிகாரி - அடுத்து நடந்த சம்பவம்..!
IAS Officer Bisleri: பிஸ்லெரிக்கு பதிலாக பில்செரி வாட்டர் பாட்டில், கடுப்பான ஐஏஎஸ் அதிகாரி - அடுத்து நடந்த சம்பவம்..!
TN Rain Updates: இன்று 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை, சென்னை? - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Updates: இன்று 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை, சென்னை? - வானிலை மையம் எச்சரிக்கை
Embed widget