மேலும் அறிய
Advertisement
அத்திவரதர் பாஸ் காரணமா..? காஞ்சியில் பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை ஏன்?
காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடைகள் உட்பட 9 இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரத்தில் பிரபல ஜவுளி கடைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதாகவும், வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று காலை 8 மணிக்கு காஞ்சிபுரத்துக்கு விரைந்தனர். அங்கு, காந்தி ரோடு மற்றும் டி.கே.நம்பி தெருவில் இயங்கி வரும் பிரபல தனியார் ஜவுளி நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடையில் பணிபுரியும் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியே அனுப்பி விட்டு ஷோரூம் காசாளர், பில்லிங் செக்ஷன்கள், குடோன் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே ஒரு தனியார் நிதி நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடந்தது. மேலும் ஜவுளி கடை மற்றும் நிதி நிறுவன உரிமையாளர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது. மொத்தம் 8 இடங்களில் மொத்தம் 54 அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரே நேரத்தில் நடந்த சோதனையால் மற்ற நிறுவன உரிமையாளர்களும் பீதியடைந்தனர். அங்கும் சோதனை நடக்கக் கூடும் என்பதால் பரபரப்பு நிலவியது. வேலூர்: வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள தனியார் சில்க்ஸ் நிறுவனத்திற்கு இன்று காலை 9 மணியளவில் சென்ற வருமான வரித்துறையினர், கடையில் இருந்து யாரையும் வெளியேற அனுமதிக்கவில்லை. காரில் குழுவாக வந்து இறங்கிய வருமான வரித்துறையினர், ஷோரூம் காசாளர், பில்லிங் செக்ஷன்கள், சரக்கு இருப்பு வைக்கும் கிடங்கு உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது கடையின் அனைத்து விற்பனை, கொள்முதல், இருப்பு பதிவேடுகள், ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டனர். அதோடு கடையின் சரக்கு இருப்பையும் தங்கள் ஆய்வின்போது கருத்தில் கொண்டனர். தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையின் இந்த ரெய்டு காரணமாக வேலூர் காட்பாடி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் வைபவம் நடை பெற்றபோது, தங்கள் வாடிக்கையாளர்களை கவர அதிக அளவு பட்டு சேலை எடுத்தவர்களுக்கு, விரைவாக அத்தி வரதர் தரிசிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட சிறப்பு தரிசன அனுமதி பாஸ்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் சில பிரபல துணிக்கடைகளின் ஊழியர்களும் சிக்கினர். இதுகுறித்தும் வருவாய்த் துறையினர் நடத்திய ஆய்வில் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion