மேலும் அறிய
Advertisement
கடலூரில் பெண்ணுக்கு முதல்தவணை தடுப்பூசியை இரண்டு முறை செலுத்திய செவிலியரால் பரபரப்பு...!
''இச்சம்பவத்தால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த சில பயனாளிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்''
பெண்ணாடம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பரபரப்பு
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் இருளர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவருடைய மனைவி லட்சுமி (50) இவர் கட்டிட தொழிலாளி இன்று காலை பெண்ணாடத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் செயல்பட்டுவரும் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடுவதற்காக இன்று காலை பத்து முப்பது மணி அளவில் வந்துள்ளார். அப்பொழுது லக்ஷ்மி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தடுப்பூசியை போடுவதற்காக செவிலியரிடம் கேட்டு சென்று காத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு இருந்த செவிலியர் மற்றொருவரிடம் பேசிக்கொண்டே யார் அமர்திருக்கிறார் என்று பார்க்காமல் தடுப்பூசியை செலுத்தியதாகவும் மீண்டும் அதே பெண்மணிக்கு சிறிது நேரத்தில் 2வது முறையாக தடுப்பூசியை செவிலியர் லட்சுமிக்கு செலுத்த முயன்ற போது தனக்கு முன்பே ஊசி போட்டு விட்டதாக கூறியும் அதை காதில் வாங்காமல் மீண்டும் இரண்டாவது ஊசியை செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகன் ஐயப்பன் சம்பந்தப்பட்ட மருத்துவரை நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளார், கேட்டதற்கு லட்சுமிக்கு ஒரு ஊசி மட்டுமே செலுத்தியதாகவும் இரண்டாவது முறை ஊசி செலுத்தவில்லை என செவிலியர் மற்றும் மருத்துவர் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் ஊசியை செலுத்தி கொண்ட லட்சுமி தனக்கு இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டது என கையில் போடப்பட்ட ஊசியின் தழும்பை காட்டி மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் விளக்கினார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இரண்டு முறை தடுப்பூசி எழுதப்பட்டதாகக் கூறப்படும் லட்சுமிக்கு அந்த மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று லட்சுமிக்கு மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர், இரண்டு ஊசி செலுத்தப்பட்டு இருந்தாலும் அவரின் உடல்நிலைக்கு ஒன்றும் ஆகாது என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இச்சம்பவத்தால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த சில பயனாளிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தினால் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றைய தினம் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை ஊக்கவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது, கடலூரில் 1,70,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த 909 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 80,000 திர்க்கும் மேற்பட்டோர்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது இந்நிலையில் நடைபெற்று உள்ள இச்சம்பவத்தால் மக்களிடையே தடுப்பூசி செலுத்தி கொள்ள பயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை நம்பி தான் மருத்துவமனைக்கு வந்து பயமின்றி தடுப்பூசி செளுத்திகொள்கிரார்கள் ஆதலால் அவர்கள் மக்களின் நம்பிக்கை உடையாதவடி நடந்துகொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion