மேலும் அறிய
Advertisement
Tamil News: சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
அச்சுறுத்தும் கொரோனா, துரைமுருகன் மீது குண்டாஸ், ஆன்லைன் சூதாட்டத்தால் வங்கி அதிகாரி தற்கொலை உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
1. கடந்த 10 நாட்களில் மட்டும் தலைநகர் சென்னையில் மட்டும் 146 என பதிவாகியிருந்த தினசரி பாதிப்பு 776-ஆக அதிகரித்து 5 மடங்காக உயர்வு
2. திருவள்ளூர்:ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரமற்ற உணவால் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி பரப்பிய புகாரில் சிறையில் உள்ள பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
3. காஞ்சிபுரம் அடுத்த, தாமல் ஏரி இரண்டாவது முறையாக நிரம்பி, உபரி நீர் வெளியேறியது. இதனால் நடப்பாண்டு விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
4. காஞ்சியில் களவாடப்பட்ட மற்றும் குற்ற செயலில் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை உரிமை கோராத வாகனங்களை ஜனவரி 4ஆம் தேதி ஏலம் விடப்படும் என காஞ்சிபுரம் காவல் துறையினர் தெரிவித்தனர்.
5. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் வசித்துவரும் ஷாயிஷா (26) என்ற பெண்ணை அவரது கள்ளக்காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
6. சென்னை அடுத்துள்ள பெருங்குடி பகுதியில் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தனியார் வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார் . ஆன்லைன் சூதாட்டம் காரணமாக 15 லட்ச ரூபாய் வரை கடனாளியாக ஆனதால் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
7. இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது, ஒமைக்ரான வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 15 வயது முதல் 18 வயது வரை சிறுவர் சிறுமியர்களுக்கு, தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் தமிழகத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
8. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அனுமதியில்லாமல் காளை விடும் விழா நடத்தி 50க்கும் மேற்பட்டோர் படுகாயகம் அடைந்தால் காளை விடும் விழா நடத்திய முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு
9. கடலூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கல்லூரி மாணவி பிணமாக மீட்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை
10. விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் இறந்து கிடந்த நான்கு வயது சிறுவன் குறித்து தகவல் தெரிவிக்கக் கோரி, மூன்று மாவட்டங்களில் தனிப்படை போலீசார் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion