Tamil News| சென்னையில் வெளுத்து வாங்கிய அதிகனமழை...! புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - வடமாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
சென்னையில் கொட்டித்தீர்த்த அதிகனமழை, 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் விடுமுறை, 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பு உள்ளிட்ட செய்திகளில் தொகுப்பு இதோ
1. தொடர் கனமழை காரணமாக 31.12.2021 ஒரு நாள் மட்டும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
2. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு
3. சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, டி நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்ஆர்சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நள்ளிரவு நேரத்தில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
4. தொடர்மழை காரணமாக செம்பரபாக்கம் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நிலையில் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம். புழல் ஏரியில் இருந்து நேற்று வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றம்
5. ஆந்திராவில் இருந்து கூரியர் பார்சலில் போதை மாத்திரைகளை வரவழைத்து அவற்றை மாணவர்களுக்கு விற்பனை செய்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
6. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இன்று மற்றும் நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை எனவும் ஏற்கனவே உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், உணவங்கள், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11 மணிவரை செயல்படும் எனவும் ஆட்சியர் அறிவிப்பு
7. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு கோயில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்
8. மாமல்லபுரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பார்வையாளர் வாராததன் காரணமாக 8 ஆம் நாள் நாட்டிய நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, 9 ஆம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக கடந்தாண்டு டெண்டர் வெளியிடப்பட்டதில் விதிமீறல் ஏதும் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
10. கேளம்பாக்கம் அருகே திருமணம் செய்துகொள்ள கூறி வற்புறுத்திய தனது முன்னாள் காதலனான கல்லூரி ஊழியரை மாணவி ஆண் நண்பருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த இளம்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், நாகை, காரைக்கால், திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு