Chennai ; வீட்டை காலி செய்ய சொன்னதால் , ஹவுஸ் ஓனரின் மகனுக்கு நேர்ந்த கொடூரம்
லீசுக்கு இருந்த வீட்டை உடனே காலி செய்ய சொன்னதால் வீட்டின் உரிமையாளரின் 13 வயது மகனை கத்தியால் வெட்டி தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

13 வயது சிறுவனுக்கு முதுகில் வெட்டு
சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமம் காந்திநகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கணேசன் (45) இவரது வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஸ்கர் என்பவர் லீசுக்கு இருந்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் அவர் கொடுத்த லீஸ் தொகை ரூ.6 லட்சத்தை கணேஷ் திருப்பி கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுமாறு கூறி உள்ளார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாஸ்கர் வீட்டில் இருந்த சிறிய கத்தியை எடுத்துச் சென்று கணேசன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று அவரது மகனிடம் தகராறு ஈடுபட்டு 13 வயது சிறுவன் என்று பாராமல் முதுகில் சரமாரியாக வெட்டுயுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மகனை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு 31 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் பாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாஸ்கர் மீது எந்த தவறும் இல்லை எனக்கு கூறி அவரது குடும்பத்தார் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பாஸ்கர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது
இது குறித்து பேசிய சிறுவனின் தந்தை ;
நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எங்கள் வீட்டுக்கு மேல் தளத்தில் இருந்த குடியிருந்த பாஸ்கர் லீசுக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். வீட்டை காலி செய்ய சொல்லி லீசுக்கு அனுப்பிய பணத்தை கொடுத்து விட்டேன். ஆனால் பணத்தை பெறவில்லை என கூறி , காலையில் வந்து பிரச்னை செய்து போலீசுக்கு நாங்க போக மாட்டோம். நீங்களே தானாக போவீர்கள் எனக்கு கூறி , இது குறித்து வழக்கறிஞர்களை வைத்து புகார் அளிக்க இருந்த போது என் வீட்டின் அருகில் இருப்பவர்கள் என்னை ஓடி வந்து உனது மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என கூறவே பயந்து போய் நான் ஓடி வந்து பார்த்த போது எனது மகனை வண்டியில் ஏற்றினார்கள்.
உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை சென்று பார்த்த போது நான்கு இடங்களில் சரமாரியாக வெட்டி இருப்பது தெரிய வந்தது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





















