மேலும் அறிய

காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரே உள்ள பெரியார் சிலை - சிலைக்கு பின்னால் உள்ள வரலாறு தெரியுமா?

’’1974, 1980ஆம் ஆண்டுகளில் சங்கரமடம் அருகே  பெரியார் சிலை வைப்பதற்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கான அனுமதியை தமிழக அரசு தரவில்லை’’

தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. முன்னதாக, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ’’பெரியார் நடத்திய போராட்டங்கள் யாராலும் காப்பியடிக்க முடியாத போராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துகள்; அவர் பேசிய பேச்சுகள் யாரும் பேச பயப்படும் பேச்சுகள்; அவர் நடந்த நடை யாரும் நடந்திடாதவை; அவர் செய்த பயணங்கள் யாரும் செய்திடாதவை’’ என்று இந்த அறிவிப்பின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரே உள்ள பெரியார் சிலை - சிலைக்கு பின்னால் உள்ள வரலாறு தெரியுமா?

இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், சமத்துவமற்ற தன்மை, பெண்களுக்கு உரிமை மறுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எழுதியும் பேசியும் வந்த பெரியாருக்கு தமிழகம்  முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு முன்பு சிலை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பாக வைக்கப்பட்ட பெரியாரின் சிலையின் கீழ் கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை வழிபடுகின்றவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களும் எழுதப்பட்டு இருக்கும். இதே போல காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் முன்பாகவும் பெரியார் சிலையை வைக்க திராவிடர் கழகம் திட்டமிட்டது. 

காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரே உள்ள பெரியார் சிலை - சிலைக்கு பின்னால் உள்ள வரலாறு தெரியுமா?
காஞ்சிபுதில் அமைந்துள்ள காஞ்சி சங்கர மடம் ஆன்மீக மடமாக மட்டும் இல்லாமல், ஒரு படி மேலே சென்று அரசியல் செல்வாக்குமிக்க இடமாகவும் விளங்கி வருகிறது. குடியரசுத் தலைவர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் சங்கர மடத்தில் உள்ள சங்கராச்சாரியார்களை தரிசித்துச் செல்வது வழக்கம். அந்த அளவிற்கு செல்வாக்குமிக்க மடமாக காஞ்சிபுரம் சங்கரமடம் விளங்கி வருகிறது. 

காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரே உள்ள பெரியார் சிலை - சிலைக்கு பின்னால் உள்ள வரலாறு தெரியுமா?
1974 ஆம் ஆண்டில் சங்கரமடம் அருகே பெரியார் சிலை வைப்பதற்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, அப்போது தமிழக அரசு சார்பில் அதற்காக அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனிடையே இந்தியா முழுவதும் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்ததால் பெரியார் சிலை அமைப்பதற்கான முயற்சிகள் சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு, செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் காஞ்சி. சி.பி. இராசமாணிக்கம் நகராட்சி,  காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் பெரியார் நூற்றாண்டு விழாவில் சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு அனுமதி மறுத்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கூட எதிரொலித்தது. 

காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரே உள்ள பெரியார் சிலை - சிலைக்கு பின்னால் உள்ள வரலாறு தெரியுமா?
இதனையடுத்து காஞ்சி. சி.பி. இராசமாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த  நீதியரசர் வீ.இராமசாமி அரசுக்கு மூன்று வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தாக்கீது பிறப்பித்தார் (7.9.1979). இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் சங்கர மடம் அருகே சிலை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று 24-02-1980, அன்று திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கி. வீரமணி திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரே உள்ள பெரியார் சிலை - சிலைக்கு பின்னால் உள்ள வரலாறு தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சங்கரமடம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, சில குறிப்பிட்ட அமைப்பினர் மட்டுமே பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி,  பல்வேறு அமைப்பினர் பெரியார் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த வருடமும் திக, திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் மன்றம், விடுதலை சிறுத்தைகள்  கட்சி உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
"பெங்களூரு டிராபிக்.. கடவுளே வந்தாலும் பிரச்னையை தீர்க்க முடியாது" டி.கே. சிவகுமார் தடாலடி!
Embed widget