மேலும் அறிய
Advertisement
விவசாயிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சு கிடைக்குமா.? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பெரிய ஏரிகளின் நிலவரம் என்ன?
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். தற்பொழுது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் , பிரதான ஏரிகளின் நிலவரத்தை பார்க்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம்
தாமல் ஏரி 18 அடி கொள்ளளவை கொண்டது. தாமல் ஏரி முழுமையாக நிரம்பி, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள தென்னேரி 18.60 கொள்ளளவைக் கொண்டது. தற்பொழுது நீர் இருப்பு 18.60 அடியாக உள்ளது, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
உத்திரமேரூர் பெரிய ஏரியானது 20 அடியைக் கொண்டது. இந்த ஏரி நீர் 18 கொள்ளளவை எட்டியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஏரி 17.60 அடி கொள்ளளவை கொண்டது ஏரி முழுமையாக நிரம்பி, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள பிள்ளைப்பாக்கம் ஏரி 13.2 கொள்ளளவை கொண்டது. ஏரியின் நீர் அளவு 12.95 அடியாக உள்ளது. மற்றொரு பெரிய ஏரியான மணிமங்கலம் ஏரி 18.6 கொள்ளளவை கொண்டது, ஏரி முழுமையாக நிரம்பி, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் ஏரி மிகப்பெரிய ஏரியாக இருந்தாலும் தற்பொழுது, பணி நடைபெறுவதால் ஏரியிலிருந்து நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. கொலவாய் ஏரி 15 அடியை கொண்டது. 12.60 அடியை எட்டி வருகிறது. தண்ணீர் மிக வேகமாக நிரம்பி வருகிறது. பாலூர் பெரிய ஏரியானது 21 அடி கொள்ளளவை கொண்டது 12 அடியை எட்டியுள்ளது. பொன்விளைந்த களத்தூர் ஏரி 15 அடியை கொண்டது , ஏரி முழுமையாக நிரம்பி, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, காயார் ஏரி 15.07 அடி கொள்ளளவை கொண்டது ஏரி முழுமையாக நிரம்பி, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.. மானாமதி ஏரி 14.11 கொள்ளளவை கொண்டது 14.11 அடியை எட்டியுள்ளது. கொண்டங்கி ஏரி தனது 16 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில், தற்பொழுது ஏரி முழுமையாக நிரம்பி, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. . சிறுதாவூர் ஏரி 13.07 அடி கொள்ளளவை கொண்டது, ஏரி முழுமையாக நிரம்பி, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.. தையூர் ஏரி தனது முழு கொள்ளளவான 13 அடியை எட்டியுள்ளது. செய்யூர் ஒன்றியத்திற்குட்பட்ட, மிகப்பெரிய ஏரியான பல்லவன் குளம் ஏரி 15.7 அடியை கொள்ளளவை கொண்டது 15 அடியை எட்டியுள்ளது.
வடகிழக்கு பருவமழை
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டு மேலாக அவ்வப்பொழுது மழை பெய்து வந்ததால், ஏரிகள் முழுமையாக வற்றாமல் இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 662 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.முக்கிய ஏரிகளில் தண்ணீர் அதிகரித்து வருவதால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion