![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அதிமுக சேர்மன் & MD of Company எடப்பாடி பழனிசாமியா - எச்.ராஜா பதிலடி
பாஜகவை கார்ப்பரேட் நிறுவனம் என விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி சேர்மன் அண்ட் எம்.டி ஆஃப் தி அதிமுக அப்படின்னு சொல்லலாமா என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா பேட்டி
![அதிமுக சேர்மன் & MD of Company எடப்பாடி பழனிசாமியா - எச்.ராஜா பதிலடி H Raja says AIADMK MD of Company Edappadi Palaniswami - TNN அதிமுக சேர்மன் & MD of Company எடப்பாடி பழனிசாமியா - எச்.ராஜா பதிலடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/01/f5f17cd1e726f66df52b826d9538e4f81725188076263113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா சந்தித்து பேசினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உயர்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். மாநில தலைவர் இல்லாததால் தமிழக பாஜகவில் ஒருங்கிணைப்பு குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உருவாக்கினார். இந்த ஒருங்கிணைப்பு குழு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஒருங்கிணைப்பு குழு போடப்பட்ட பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மூத்த தலைவர் எஹ்.ராஜா சந்தித்து பேசினார்.
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா
மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன். ஒருங்கிணைப்பாளராக ஆன பிறகு அவரை சந்தித்து பேசினேன் வாழ்த்து தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருந்த போது அவர் சான்றிதழ் அளித்த ஒரு ஊழல் குற்றவாளி தான் செந்தில் பாலாஜி. திமுக ஆட்சிக்கு வந்தது செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு சென்று விட்டார்.
6 ஆண்டு ஒரு முறை கட்சி உறுப்பினர்கள் பணியை புதுப்பிப்பார்கள் அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது ஒன்றிய , நகராட்சி அனைத்து நிர்வாகிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது பிரதமர் உறுப்பினர் காலத்தை புதுப்பிக்க உள்ளார்.
அன்றாட மக்களை பாதிக்க உள்ளாக்கும் விஷயங்களை எடுத்துக் கொண்டு தேவை ஏற்பட்டால் போராட்டம் நடத்துவது மக்களிடம் எடுத்து செல்வது ஆகிய பணிகளை ஈடுபடுவோம். ரயில்வே பட்ஜெட்டில் 6000 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு நிரந்தர முதலீட்டுக்கு எவ்வளவு தொகையை ஒதுக்கி உள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் அதுபோன்று எதுவும் செய்யாமல் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக நிதியை ஒதுக்க உள்ளனர். இதற்கு தமிழக நிதி அமைச்சர் இதற்கு பதில் சொல்ல வேண்டும். திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததை விட தற்பொழுது அதிக திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்துள்ளது.
நொண்டி குதிரைக்கு சற்குணது சாக்கு என்பது போல் இந்த கையாலாகாத தமிழக அரசு இவர்களுடைய கரப்சனை மூடி மறைப்பதற்கு மத்திய அரசை குற்றம் சாட்டுகிறார்கள்
அதிமுக எப்படி செயல்படுது எடப்பாடி அதிமுகவின் எம்டியா சேர்மேனா ஏதாவது பேசணும் என்பதற்காக பேசக்கூடாது நான் பாஜகவில் கட்சி துவங்கியது முதல் தொடர்ந்து ராஜா பதவியில் இல்லை என நினைத்தார்கள் 35 ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருக்கிறேன்
இன்றைய கட்சியை வழிநடத்தக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறேன் பல அதிமுக அமைச்சர்கள் இவர்கள் அரசியலில் வருவதற்கு முன்பாக கட்சி ஆரம்பித்த கட்சியில் இருந்தவன். பாஜகவை கார்ப்பரேட் நிறுவனம் என விமர்சிக்கும் அதிமுக இன்று நண்பர் எடப்பாடி சேர்மன் அண்ட் எம்டி ஆப் தி அதிமுக அப்படின்னு சொன்னா எப்படி
என்னுடைய குடும்ப விழாவிற்கு அனைத்து அரசியல தலைப்புகளும் வருவார்கள் அதனால் அவர்களை அண்ணன் என்று குறிப்பிட்டேன்.
தமிழக அரசு ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
நேற்றைய தினம் பிரதமர் அவர்களே தமிழகத்திற்கு 6000 கோடி நிதி ஒதுக்கியதாக தெரிவித்துள்ளார் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது என்று யார் கூற முடியும்
கார் பந்தயம் தொடர்பான கேள்விக்கு விளையாட நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதை பற்றி எதுவும் பேச வேண்டாம் அந்தந்த துறைகளின் அனுமதி பெற்று நடத்த வேண்டும் எனவும் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை எச்.ராஜா சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)