மேலும் அறிய

G20 Summit 2023: ஜி20 கல்வி செயற்குழு மாநாடு...சென்னையில் 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை

ஜி20 மாநாட்டை முன்னிட்டு சென்னை மற்றும் மகாபலிபுரத்தில் 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் மகாபலிபுரத்தில் 3 நாட்கள் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாளை முதல் பிப்ரவரி 2 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஜி20 உச்சி மாநாடு:

ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாடு புதுடெல்லியில் செப்டம்பர் 9 , 10 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

ஜி-20 கல்விக்குழுவின் முதலாவது கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக வரும் 31 அன்று ( நாளை ) சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் “கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு” குறித்த கருத்தரங்கு நடைபெறும். இதைத்தொடர்ந்து உலகளாவிய தளத்தில் கல்வித்துறையில் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய  கண்காட்சி நடைபெற உள்ளது.

பங்கேற்பு:

இந்தக் கூட்டத்திற்கு ஜி-20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், யுனெஸ்கோ, யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகள் ஆகியவற்றின் 63 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.  பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில், கல்வி அமைச்சகம், என்சிஇஆர்டி போன்றவற்றின் அதிகாரிகள், கல்வித்துறை நிபுணர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் கருத்தரங்கத்திற்கு மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர்  கே.சஞ்சய் மூர்த்தி தலைமை வகிப்பார். தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முறையை அனைத்து நிலையிலும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தரம் உள்ளதாகவும், ஒத்துழைப்புடையதாகவும் மாற்றுவது. இந்தக் கருத்தரங்கின் முன்னுரிமை மையப்பொருளாக  இருக்கும். ஜி-20 உறுப்பு நாடுகளிலும், வரவேற்கப்பட்ட நாடுகளிலும்  பின்பற்றப்படுகின்ற சிறந்த நடைமுறைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் சென்னை ஐ.ஐ.டி.-யின் இயக்குனர் பேராசிரியர் காமகோடி விவரிப்பார்.

கல்வித்துறை:

கல்வித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை  பயன்படுத்துவதில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகள் பற்றி ஜி-20 உறுப்பு நாடுகளும், விருந்தினர் நாடுகளும் காட்சிப்படுத்துவதற்கு முதல் முறையாக இந்தியா தனித்துவமான தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.  இந்தக் கண்காட்சியில் 50-க்கும் அதிகமான அரங்குகள் இடம் பெற இருக்கிறது. 

தமிழ்நாட்டில் இருந்து மாநில கல்வித்துறையின் நான் முதல்வன், நம்மப்பள்ளி திட்டங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் அரங்குகள் கண்காட்சியில் இடம் பெறும். மத்திய அரசின் இந்திய ஸ்வையம், சமர்த், தீக்ஷா போன்ற திட்டங்கள் பற்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உபகரணங்கள் தயாரிக்கும்  ஸ்டார்ட் அப் இந்தியா நிறுவனங்கள் மற்றும் சவுதி அரேபியா, பிரான்ஸ், சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைக்கவுள்ளன.

ஜி-20 கல்விப்பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பிப்ரவரி 1 -ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட உள்ளனர். நடன நிகழ்ச்சிகள் உள்பட தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் இசைஇரவுகளுக்கும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை மற்றும் மகாபலிபுரத்தில் 3 நாட்கள் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாளை முதல் பிப்ரவரி 2 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு காரணங்களுக்காக 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Also Read: புதுச்சேரி : ஜி20 பிரதிநிதிகள் தங்கும் இடம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடங்களில் நாளை காலை (29.01.2023) முதல் 144 தடை சட்டம் அமல்.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget 2026: இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் வெளியான மாஸ் அப்டேட்!
இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் மாஸ் அப்டேட்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை அலர்ட்: உங்க ஊரு இந்த லிஸ்ட்ல இருக்கா? முழு விவரம்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை அலர்ட்: உங்க ஊரு இந்த லிஸ்ட்ல இருக்கா? முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
Embed widget