அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலோஃபர் கபில் : பின்னணி என்ன ?

2021  சட்டசபை தேர்தலில் வாய்ப்பளிக்காத கோபம் ஒரு பக்கம் இருக்க , பண மோசடி தொடர்பாக அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதியவும் மற்றும் சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கணித்த நிலோபர் கஃபில் ஆளுங்கட்சிக்கு தாவி தன்னை தற்காத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் திமுக பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார் .

FOLLOW US: 

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக கட்சியின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபில், இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர் .


அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலோஃபர் கபில் :  பின்னணி என்ன ?


இந்த அதிரடி முடிவுக்கான விளக்கமாக நிலோபர் கஃபில் “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், டாக்டர் நிலோபர் கஃபில் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்திருந்தனர் .


இது குறித்து ABP நாடு செய்தி குழுமத்தின் ஆய்வில், நம்பத்தகுந்த கட்சி வட்டாரங்களின் பல திடுக்கிடும் தகவல்கள் கசிந்தன . அதில் அதிமுக கட்சி சார்பில் வாணியம்பாடி நகர மன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்டிருந்த டாக்டர் நிலோபர் கஃபிலுக்கு வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை நிற்பதற்கு, ஜெயலலிதா அவர்களால் வாய்ப்பு அளிக்கப்பட்டு , 2011-ஆம் ஆண்டு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் நிலோபர் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக கடந்த ஐந்தாண்டு காலம் பதவி வகித்து வந்தார். அவர் அமைச்சராக இருந்த காலத்தில் 100-க்கும்  மேற்பட்ட பொதுமக்களிடம் அரசு வேலையை வாங்கி தருவதாகக் கூறி சுமார் 10 கோடி வரை பண மோசடி செய்துள்ளார் . தற்பொழுது பணம் கொடுத்தவர்கள் அதை திரும்பக்கேட்டு நெருக்கடி செய்வதால் திமுக கட்சியில் இணைவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்ற அதிர்ச்சி செய்தியை தெரிவித்தனர் .


அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலோஃபர் கபில் :  பின்னணி என்ன ?


இது தொடர்பாக நம்மிடம் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆலங்காயம் ஒன்றிய கழக செயலாளர் கோவி.சம்பத்குமார், “டாக்டர் நிலோஃபர் அமைச்சராக இருந்தபொழுது அவருக்கு அரசியல் உதவியாளராக  இருந்தவர் K.பிரகாசம் என்னும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர். அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வேலையைவாங்கி தருவதாக குறி திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தை சேர்ந்த 108  அப்பாவி இளைஞர்களிடம் இருந்து 6  கோடி வரை மோசடி செய்துள்ளார். மேலும் தொழில் வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் இருந்து 4  கோடி என சுமார் 10 கோடி வரை மோசடி செய்துள்ளார். இந்த பண வரவு அனைத்தையும் தனது உதவியாளர் பிரகாசம் வங்கி கணக்கில் வரவு வைத்து, பின்னர் அதனை தனது உறவினர் மற்றும் பினாமிகள் கணக்குகளுக்கு மாற்றி கொண்டுள்ளார் .


ஒரு  கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக காவல்துறை தலைவர் அவர்களிடம் ஆதாரப்பூர்வமாக அத்தகவல்களை அளித்துள்ளனர் . அந்த புகார் மனுவில் நிலோபர் கஃபில் வேலைவாங்கி தருவதாக கூறி ஏறக்குறைய ரூ.6 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார் என்றும். இன்னும் பகிரங்கமாக வெளிவராத புகார்கள் உட்பட மோசடி செய்யப்பட்ட தொகை ஏறக்குறைய ரூ.10 கோடியை தாண்டும் என்று புகார் தெரிவித்து இருந்தனர்.  இந்த புகாரை பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மட்டும் நிலோஃபரின் அரசியல் உதவியாளர் பிரகாசம் உட்பட அனைவரும் இணைந்து தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு கடந்த 3-ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளனர் .


அவருக்கு இந்த 2021 சட்டசபை தேர்தலில் வாய்ப்பளிக்காத கோபம் ஒரு பக்கம் இருக்க , அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதியவும் மற்றும் சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கணித்த நிலோபர் கஃபில் ஆளுங்கட்சிக்கு தாவி தன்னை தற்காத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் க.தேவராஜ் மற்றும் தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோரை சந்தித்து  திமுகவில் இணைவதற்காக பேச்சு வார்த்தை நடத்திவந்துள்ளார் .


அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலோஃபர் கபில் :  பின்னணி என்ன ?


இதனை அறிந்த கட்சி மேலிடம் இன்று அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அணைத்து பதவிகளிலும் இருந்து நீக்கி அதிமுக கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை விட்டுள்ளார் என்று தெரிவித்தார்” கோவி.சம்பத்குமார். இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த நிலோஃபரின் ஆதரவாளர்கள், கட்சி தலைமைக்கு தொடர்ந்து நிலோஃபர் மீது பொய்யான புகார்களை இவருக்கு  வேண்டாதவர்கள் பரப்பிவந்ததால் ,  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவருக்கு  வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மனா உளைச்சலால் அவர் அதிரடி கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக விருப்பம் தெரிவித்து ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு இன்று காலை கொடுத்ததாகவும், அதன் பேரிலே அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர் நிலோஃபர் ஆதரவாளர்கள் .

Tags: aiadmk NILOFER KAFEEL AIADMK EXPELS FORMER LABOUR MINISTER .

தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

திருவண்ணாமலை : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

Sivashankar Baba | சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது..!

Sivashankar Baba | சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது..!

வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்குப் பரவியது மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்று..!

வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்குப் பரவியது மாறுபட்ட கொரோனா  வைரஸ் தொற்று..!

மதனின் வங்கி கணக்கு முடக்கம் - ரூ.4 கோடி இருந்தது கண்டுபிடிப்பு

மதனின் வங்கி கணக்கு முடக்கம் - ரூ.4 கோடி இருந்தது கண்டுபிடிப்பு

பாபநாசம் பாணியில் முயற்சி: கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது!

பாபநாசம் பாணியில் முயற்சி: கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது!

டாப் நியூஸ்

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!