சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 11.70 லட்சம் அபராதம் வசூல்!
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் 11,70,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக இருந்த நிலையில், தலைநகர் சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை மக்கள் அனைவரும் பொதுவிடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது.
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
இது குறித்து சென்னை மாநகராட்சி பிறப்பித்திருக்கும் உத்தரவில், திரையரங்குகள், துணிக்கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றுக்கு வரும் பொதுமக்களும், கடை ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஏழு நாட்களில் முகக்கவசங்கள் அணியாத 2,340 நபர்களிடம் இருந்து 11.70 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத 2,340 நபர்களுக்கு ரூ.11,70,000/- அபராதம்
— Greater Chennai Corporation (@chennaicorp) July 13, 2022
விதிக்கப்பட்டுள்ளது.#ChennaiCorporation#MaskupChennai #CovidIsNotOver pic.twitter.com/XrsVyVhxlJ
சென்னையில் கொரோனா பாதிப்பு
இன்று (ஜூலை.13) தமிழ்நாட்டில் புதிதாக 2,267 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக 755ஆக சென்னையில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று 729ஆகக் குறைந்துள்ளது.
இன்று மட்டும் 2,697 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், தற்போது மொத்தம் 18,282 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எவரும் உயிரிழக்கவில்லை.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக இருந்த நிலையில், மூன்றாயிரத்தை நோக்கி பாதிப்பு எண்ணிக்கை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் ஜூலை 8ஆம் தேதி முதல் தொற்று எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று (ஜூலை.12) கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: TRB Polytechnic Recruitment: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்கள்: போலித்தகவல்களை நம்ப வேண்டாம் - டிஆர்பி அறிவிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்