மேலும் அறிய
Advertisement
இதய மாற்று அறுவை சிகிச்சை...! முதல்வர் காப்பீடு..! சாதித்த தனியார் மருத்துவமனை...!
15 சதவீத இதய செயல்பாட்டுடன் 18 மாதம் காத்திருந்த விவசாயிக்கு குரோம்பேட்டை ,ரேலா மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யபட்டது
சேலத்தைச் சேர்ந்த 36 வயதான விவசாயி மோகன பெருமாள். இவர் விவசாயம் தவிர பகுதி நேர ஆட்டோ டிரைவராகவும் இருந்து வந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு மூளைச் சாவு அடைந்த மதுரையைச் சேர்ந்த இளைஞரின் இதயத்தை ரேலா மருத்துவமனை டாக்டர்கள் குழு பொருத்தி உள்ளது. இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
நோயாளி பொருத்தமான இதயத்திற்காக சுமார் 18 மாதங்கள் காத்திருந்தார். பல்வேறு நன்கொடையாளர்களிடம் இருந்து இதயம் கிடைத்த போதிலும் அது அவருக்கு பொருந்தவில்லை, இந்த நிலையில் அவருக்கு சரியாக பொருந்தும் வகையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்து மூளைச் சாவு அடைந்த இளைஞரிடம் இருந்து இதயம் கிடைத்தது, அதை ரேலா மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் இதய அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்கள் குழு வெற்றிகரமாக பொருத்தி உள்ளது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை டாக்டர்கள் குழு கடந்த மாதம் 17ந்தேதி மேற்கொண்டது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மோகன பெருமாளின் மனைவி கூறுகையில், "ரேலா மருத்துவமனையின் டாக்டர்கள் எங்களுக்கு செய்த அனைத்திற்கும் நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். டாக்டர்கள் மோகன் மற்றும் பிரேம் ஆகியோர் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தனர். அதன் காரணமாகத்தான் நாங்கள் இன்று உங்கள் முன் மகிழ்ச்சியாக நிற்கிறோம். இன்று, என் கணவருக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இது இல்லாவிட்டால் எனது கணவரின் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியாது" என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion