உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு மோகன் பவுண்டேஷன் ( பல்லுறுப்பு தான உதவி மையம் ) மூலமாக அலிஷா அப்துல்லா உடல் உறுப்பு தானம்
உறுப்பு தானம் என்றால் என்ன?
உறுப்பு தானம் என்பது மனிதர்களிடமிருந்து ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் உறுப்புகள் பிரித்தெடுக்கப்படும் ஒரு செயல் முறையாகும். பின்னர் இந்த உறுப்புகள் நன்கொடையாளர் உயிருடன் இருக்கும் போது அல்லது நன்கொடையாளரின் குடும்பத்தின் அனுமதியுடன் இறந்த நிலையில், சட்டப்பூர்வமாக மற்றொரு தேவையுள்ள நபருக்கு மாற்றப்படும். இதன்மூலம், உடல் உறுப்பு தானம் மூலம் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைச் செய்ய மக்களை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியா
இந்தியாவில் உறுப்பு தானம் பற்றி பேசும்போது, அது ஒரு தேர்வு முறையைப் பின்பற்றுகிறது. நமது இந்திய அரசு உடல் உறுப்பு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும், மூளைச் சாவுக்குப் பிறகு மக்களிடையே தானம் செய்வதை ஊக்குவிக்கவும் ஒரு சட்டத்தை உருவாக்கியது. சட்டத்தின்படி, மனித உறுப்புகளின் மாற்றுச் சட்டம், 1994, தங்கள் உறுப்புகளை தானம் செய்ய விரும்பும் எந்தவொரு நபரும் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை நிரப்ப வேண்டும்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள்
சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள மோகன் பவுண்டேஷன் ( பல்லுறுப்பு தான உதவி ) மையம் மூலமாக பிரபல சர்வதேச ரேசர் இந்தியாவின் முதல் கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லா உடல் உறுப்பு தானத்தை மோடியின் பிறந்தநாள் முன்னிட்டு செய்தார்.
அப்போது மோகன் பவுண்டேஷனில் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சுனில் ஷெராப் உடன் இருந்தார். மேலும் இந்த உடல் உறுப்பு தானம் செய்வதால் எந்த விதத்திலும் வெளிப்புறத்தில் மாற்றம் தெரியாது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிக கவனத்துடன் தானம் செய்கின்ற உறுப்பை மட்டும் நீக்கி விடுவார்கள் அதனால் எந்த பாதிப்பும் வராது அதனால் தான் நான் உடல் உறுப்பு தானம் அளிக்க பாரத பிரதமரின் பிறந்தநாளில் முடிவு செய்து பதிவு செய்துள்ளேன் என்றார் அலிஷா அப்துல்லா.
I Alisha Abdullah pledge to donate my organs on honourable Prime Minister Thiru. Narendra Modi ji's birthday, to create awareness regarding the organ donation.
— Dr. Alisha Abdullah (@alishaabdullah) September 17, 2024
I m proud to say that I’m an organ donor.
Let’s give hope even after we are no more. #NarendraModi… pic.twitter.com/s70ynpzGqd
பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் சுனில் ஷெராப் கூறுகையில் ;
இப்பொழுது உடல் உறுப்பு தானம் செய்வதால் எந்த வித மாற்றமும் செய்கின்ற நபர்களுக்கு வருவதில்லை அந்த அளவிற்கு மருத்துவத்துறை வளர்ந்து விட்டது. எங்கள் நிறுவனம் 27 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இதுவரை 12 ஆயிரம் பேருக்கு மேல் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளார்கள். இந்த அமைப்பானது இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.