மேலும் அறிய
"கருத்துக் கணிப்புகளை நம்பவும் முடியாது; புறந்தள்ளவும் முடியாது" - திருநாவுக்கரசு சொல்வது என்ன?
" சிலநேரங்களில் துல்லியமான முடிவுகளாக கூட அமையும் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு காஞ்சிபுரத்தில் பேட்டி. "

திருநாவுக்கரசு
கருத்துக் கணிப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது , அதனை புறந்தள்ளி விடவும் முடியாது. சில நேரங்களில் துல்லியமான முடிவுகள் ஆக கூட அமையும் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு காஞ்சிபுரத்தில் பேட்டி.
காஞ்சிபுரம் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் சேகர் இல்ல திருமணத்தில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான திருநாவுக்கரசர் காஞ்சிபுரம் வருகை புரிந்து திருமணத்தில் மணமக்களை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தினார். அதற்கு முன்பாக நேற்று இரவு காஞ்சி சங்கரமடத்தில் ஸ்ரீ விஜயேந்திரரையும், புகழ்பெற்ற தட்சிணாமூர்த்தி திருக்கோயில் சித்திரகுப்த திருக்கோயில் தனது மனைவியுடன் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசு எம்பி, கருத்துக் கணிப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அதே சமயத்தில் அதை புறந்தள்ளவும் முடியாது எனவும், சில நேரங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்தும் அமைப்புகளின் கணிப்புகள் துல்லியமாகவும் இருந்துள்ளது. கருத்துக் கணிப்புகள் நடத்துவது அவர்களின் செயல் என்பது நடைமுறையை எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், நகர காங்கிரஸ் தலைவர் நாதன், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி வி மதியழகன், காங்கிரஸ் நிர்வாகிகள் அன்பு,யோகி, சேரன், இன்பநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion