மேலும் அறிய

'தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஈபிஎஸ்’ என்ன காரணம்?

திமுகவினரின் அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக் கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன் - உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா ஸ்டாலின் - EPS

இளம் பெண்கள் அரசியல்வாதிகளுக்கு இரை

திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச் செயல் , இளம் பெண்களை கட்டாயப்படுத்தி அரசியல்வாதிகளுக்கு இரையாக்கி வருவதாக, பாதிக்கப்பட்ட மாணவி சமீபத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். புகாரை தொடர்ந்து , திமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அவர் மீது எடுக்கப்பட்டது.

கை துப்பாக்கியுடன் கவுன்சிலர் 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு உரிய அனுமதி இன்றி துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல் துறையினர் கைது செய்தனர்.

திமுகவினர் தொடர்ந்து , பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. 

இந்நிலையில் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ; 

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி , அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இந்நிலையில் , அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் , தான் திமுக அரசின் காவல் துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.

காவல் துறை மிரட்டல்

திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச் செயல் மாணவியை ஏமாற்றுகிறான்- பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான் - இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல் துறை மிரட்டுகிறது - திமுக இளைஞரணியின் ஏவல் துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.

ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் புழக்கம்

திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத  துப்பாக்கி இருக்கிறது.
போதை இளைஞரிடம் கத்தி- பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி , சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்து விட்டது .

இதைத் தானே , இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன் ? இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு MK ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது ?

உங்களுக்கு வெட்கமே இல்லையா ?

இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை. ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக் கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன் - உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா ஸ்டாலின்.

ஏன் தெய்வச் செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக ? தெய்வச் செயலைக் காப்பாற்றுவதன் மூலம் , பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு - காக்கப்படுகிறதா ? அப்படியெனில் , #யார்_அந்த_SIR ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை , எங்கள் கேள்விகள் ஓயாது.

திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் ஸ்டாலின் ? சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு , ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப் போவது இல்லை.

நான் எப்போதும் சொல்வது போல , இந்த ஆட்சி முடியும் வரை , மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் - குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து.

என வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

தலைப்பு செய்திகள்

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget