நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நான் இதை பற்றி தான் பேசப்போறேன் - துரை வைகோ
ஆளுநர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நான் பேச உள்ளேன் - துரை வைகோ

தமிழக ஆளுநர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இன் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுவதாக துரை வைகோ குற்றச்சாட்டு
மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான வைகோவின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 40 லட்சம் செலவில் ஆண்கள் உடற்பயிற்சி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா சென்னை கொடுங்கையூரில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ;
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசி இருந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த துரை வைகோ, தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. ஒரு சில குற்றங்கள் நடைபெற்றாலும் அவ்வப்போது தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் போல செயல்படாமல் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸின் கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.
நாடாளுமன்ற தொடரில் இதை பேச உள்ளேன்
ஆளுநர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நான் பேச உள்ளேன். ஏனென்றால் பாஜக அல்லாத மாநிலங்களில் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் இடையூறு செய்கிறார்கள் என காட்டமாக தெரிவித்தார். மேலும் வக்ஃப் சட்ட சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குரல் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

