மேலும் அறிய

Chembarambakkam Lake : சென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் அதிகரிக்கும் நீர்வரத்து..

" செம்பரம்பாக்கம் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 1280 கனடியாக உள்ளது "

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் 6,816 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் அளவிற்கான நீர் தற்பொழுது ஏரிகளில் உள்ளது. 
 
செம்பரபாக்கம் நிலவரம் என்ன?
 
சென்னைக்கு குடிநீர் தேவியை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது.  இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி எம் சி. இதில் 2.720 டி எம் சி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து நேற்று வரை எதுவும் இல்லாத நிலையில் இன்று காலை பெய்த கனமழையின் காரணமாக 1280 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 157 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குடிநீர் ஏரிகளில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 72 சதவீதம் உள்ளது. செம்பரம்பாக்கம் சுற்றுவட்டார 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
 
செம்பரம்பாக்கம் ஏரி - chembarambakkam lake ( File Photo )
செம்பரம்பாக்கம் ஏரி - chembarambakkam lake ( File Photo )
 
பிற ஏரிகளின் நிலவரம்
 
 புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3300 மில்லியன் கன அடியில் தற்போது 1931 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு 130 கன அடி நீர்வரத்து வந்து வந்து கொண்டிருக்கிறது.
 
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 1081 மில்லியன் கன அடியில் தற்போது 112 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.
 
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 1837 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 460 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக இணைப்பு கால்வாய் மூலம் 70 கன அடி நீர் அனுப்பபட்டு வருகிறது.
 
செம்பரம்பாக்கம் ஏரி - chembarambakkam lake ( File Photo )
செம்பரம்பாக்கம் ஏரி - chembarambakkam lake ( File Photo )
 
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 500 மில்லியன் கன அடியில், தற்போது 347 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.  இந்த ஏரிக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. பூண்டி எரிக்கு  கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் சென்னை நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Embed widget