கோமியத்தை குடித்தால் பல நோய்கள்தான் வரும் - ஐஐடி காமகோடி கருத்துக்கு டாக்டர் பதில்
பசுஞ்சானம் மற்றும் கோமியத்தை குடித்தால் பல நோய்கள் ஏற்படக்கூடும். காமகோடி கருத்துக்கள் அறிவியலுக்கு எதிரானவை. ஐஐடி இயக்குனரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
![கோமியத்தை குடித்தால் பல நோய்கள்தான் வரும் - ஐஐடி காமகோடி கருத்துக்கு டாக்டர் பதில் Doctor Ravindrath response to IIT Kamakodi's opinion that drinking komiyam causes many diseases tnn கோமியத்தை குடித்தால் பல நோய்கள்தான் வரும் - ஐஐடி காமகோடி கருத்துக்கு டாக்டர் பதில்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/21/50753dcb41e3513ac762ae88dedd21581737457788767113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சர்ச்சையாக பேசியது தொடர்பாக அவரை கண்டிக்கும் வகையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் இரவீந்திரநாத் ;
சென்னை IIT - யின் தலைவர் காமகோடி பொது சுகாதாரத்திர்க்கு எதிராக பேசி வருகிறார். பொறுப்பற்ற முறையில் அறிவியலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது கோமியம் கொடுத்து காய்ச்சல் சரியானதாகவும் கோமியத்தில் மருத்துவ குணம் உள்ளதாக தெரிவித்தார்.
எந்த ஆதாரமும் இல்லை
ஒரு அறிவியல் தொழில் நுட்பத்தின் இயக்குனர் காய்ச்சல் மருந்துகள் பற்றியே தெரியாமல் பேசுவதற்கு பின் அரசியல் உள்ளது. பசுவை உயர்த்த பார்க்கிறார் அவருடைய கருத்துக்கள் அறிவியலுக்கு எதிரானது. எந்த வித அறிவியல் பூர்வ ஆதாரங்களும் இல்லை.
கோமியம் குடித்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு
காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அவர் கூறியிருக்க வேண்டும். காய்ச்சலுக்கு மருந்துகள் நாடாமல் கோமியம் மட்டும் குடித்து கொண்டிருந்தால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எல்லா காய்ச்சலும் மோசமான காய்ச்சல் தான். ஒரு சில நாட்கள் கால தாமதமாக சிகிச்சைக்கு சென்றாலும் உயிரிழப்பு ஏற்படலாம்.
பதவி நீக்கம் செய்ய வேண்டும்
காய்ச்சலுக்கு அடிப்படை பற்றி தெரியாமல் மக்களிடம் கருத்தை தெரிவிக்கின்றார். ஐஐடியை பயன்படுத்திக் கொண்டு ஒரு அரசியல் செய்கிறார், ஒரு சித்தாந்தத்தை திணிக்கிறார். மக்களின் நலனுக்கும் எதிராக செயல்படும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
கோமியம் குடித்தால் சிறுநீரக நோய்கள் வரும்
பசுவின் கோமியம் மூலமாக பல்வேறு நோய்கள் ஏற்பட கூடும் , கோமியம் குடிப்பதனால் சிறுநீரக நோய்கள் வர வாய்ப்புள்ளது. பசுவின் சாணத்தின் மிகப் பெரிய கிருமி நாசினி என்று கூறுகிறார். ஆனால் அதனை உட்கொண்டால் மூளை சாவு , தீராத வலிப்பு ஆகிய நோய்கள் வரலாம், பசும் பாலை காய்ச்சாமல் குடித்தாலே காசநோய் உள்ளிட்ட நோய்கள் வரக்கூடும்.
இந்துத்துவா அரசியல் உள்ளது
நவீன அறிவியல் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது இந்த அடிப்படை கூட தெரியாமல் இப்படி பேசி வருகிறார். பசுவின் கோமியத்தை குடிப்பதனால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது மாறாக நோய்கள் தான் ஏற்படும். இதில் இந்துத்துவா அரசியல் உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு நோய்கள் பசுவிற்கு வருகின்றன அவைகளின் கழிவுகளை உட்கொண்டல் அது மனிதருக்கும் பரவக்கூடும் என ஐ ஐ டி இயக்குனருக்கு தெரியாதா ?
2030 - க்குள் ஒரே தேசம் ஒரே மருத்துவமனை என்று கொண்டு வரப் பார்க்கிறார்கள், பிற்போக்கான மருத்துவ தரவுகளை துறையில் திணிக்க வேண்டும் என மோடி அரசு முடிவெடுத்துள்ளது , பாஜக ஆட்சிக்கு வரும் பொழுது போலி அரசியல் மற்றும் போலி மருத்துவம் மற்றும் அறிவியலுக்கு புறம்பானவைகளை திணித்து வருகின்றனர்.
கொரோனா விளக்கேற்றினால் சரியாகிவிடும் பசுஞ்சாணத்தை உடம்பில் பூசினால் சரியாகிடும் என்று பிஜேபியினர் கூறினார்கள். ஆனால் தடுப்பூசி வந்து தான் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றியது. அவரது கருத்துக்கு தமிழ்நாடு மக்களுக்கும் சுகாதாரத் துறைக்கு எதிரானது அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் பசு மாட்டு கொட்டகையை சுத்தம் செய்தால் கேன்சர் நோய் வராது என தெரிவித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல்.
பசுமாட்டு கோமியத்தை ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் எருமை மாட்டின் கோமியம் மற்றும் கழிவை ஏன் ஆராய்ச்சி செய்யவில்லை, ஐஐடியில் பஞ்சகவ்வியத்தை மாணவர்களுக்கு தினமும் கொடுத்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? என்று கேள்வி எழுப்பினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)