![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Diwali 2023: ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகாரர்களுக்கு அறிவிப்பு..! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சொல்வதை கேளுங்கள்..!
Diwali 2023: பால்பொருட்களால் தயாரிக்கும் இனிப்பு வகைகளை, மற்ற இனிப்புகளுடன் கலந்து வைத்திருக்கக்கூடாது. இவற்றை எத்தனை நாட்களுக்குள் உபயோகிக்க வேண்டும் என்பதை லேபிலில் அச்சிட வேண்டும்.
![Diwali 2023: ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகாரர்களுக்கு அறிவிப்பு..! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சொல்வதை கேளுங்கள்..! Diwali 2023 Kanchipuram district collector has issued various instructions to the sellers of sweet and spicy products on the occasion of Diwali festival. Diwali 2023: ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகாரர்களுக்கு அறிவிப்பு..! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சொல்வதை கேளுங்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/01/08ca32cc7ff9248818de33542f6dd5b01698820727967322_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் விற்பனையாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பல்வேறு அறிவுறுத்தல்களை கொடுத்து இருக்கிறார்.
நவம்பர் பிறந்தாச்சு. நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகளைகளில் ‘தீபாவளி’(Diwali) முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்துக்கள் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் ஒளியின் பண்டிகை என்று பெரும்பாலானோர் கொண்டாடுகின்றனர். குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்த்து மகிழ்ச்சியாக ஒரு நாளை கொண்டாடி மகிழ வேண்டும் என்பதே அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். நல்ல நாளில் எல்லா வளமும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து மகிழ்வர். இந்திய கலாச்சாரம் என்பது பல்வேறு பண்டிகைகள் நிறைந்தது. பெரும்பாலும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை இருக்கும்.
தீபாவளி 2023 ( Diwali 2023 )
இந்தாண்டு தீபாவளி (Diwali 2023 Date) நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று விடுமுறை அறிவிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரத காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. தீபாவளி முடிந்தும் நவம்பர், 14, 15 -ம் தேதிகளில் கோவர்தன் பூஜை, பாய் டூஜ் உள்ளிட்டவைகளும் கொண்டாடப்படுகின்றன.
உணவு பாதுகாப்பு துறை காஞ்சிபுரம் மாவட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள்:
§ தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, காரவகைகளுக்கு சீட்டு நடத்துவோர் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் விண்ணப்பித்து கட்டாயம் உரிமம் பெற வேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்றிருந்தால் புதுப்பித்திருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் தயாரிப்பது கண்டறியப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
* இனிப்பு, கார வகைகள் தயாரிக்க, தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்பட பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நிறமி சேர்க்கக்கூடாது.
* ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் சூடுபடுத்தி, கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது.
* தயாரிக்கும் இடம், விற்பனை செய்யும் இடம், இருப்பு வைக்கப்படும் இடங்கள் எப்போதும் சுத்தம் சுகாதாரமாக இருத்தல் வேண்டும்.
* ஈக்கள், பூச்சிகள் வராமல் இருப்பதற்கு தடுப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும்.
* சமுதாய கூடங்கள், கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர இடங்களில் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவர்கள் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
* உணவை கையாளுபவர்களுக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும்.
* பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான விபரச் சீட்டில் தயாரிப்பாளர் முழு முகவரி, உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் தேதி, காலாவதியாகும் நாள், சைவ, அசைவ குறியீடு அவசியம் குறிப்பிட வேண்டும்.
* பால்பொருட்களால் தயாரிக்கும் இனிப்பு வகைகளை, மற்ற இனிப்புகளுடன் கலந்து வைத்திருக்கக்கூடாது. இவற்றை எத்தனை நாட்களுக்குள் உபயோகிக்க வேண்டும் என்பதை லேபிலில் அச்சிட வேண்டும்.
* உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்ற நபர் பணியில் இருத்தல் வேண்டும்.
* தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் பயன்படுத்தினால் ரூ.2000/- அபராதம் விதிக்கப்படும். சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் பேப்பர், கவரில் பொட்டலமிடக்கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
* பொதுமக்கள் உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின், 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம் அல்லது TNFSD Consumer app மூலமாகவும் புகார்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)