மேலும் அறிய

Actor KPY Bala: "வாடகைக்கு மட்டும் காசு எடுத்து வச்சுக்கிட்டேன்" மீதி மக்களுக்கு தான்..... தங்க மனசு பாலா

அவருடன் விஜய் டிவி பிக் பாஸ் புகழ் அமுதவாணன் உள்ளிட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

சின்னத்திரை புகழ் நடிகர் பாலா அனகாபுத்தூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தல ஆயிரம் என இரண்டு லட்ச ரூபாய் வெள்ள நிவாரண உதவியாக தனது சொந்த பணத்தின் மூலம் வழங்கி வருகிறார்
 
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையார் ஆற்றங்கரையோரம் மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு  விஜய் டிவி (கலக்க போவது யாரு) புகழ், நடிகர் ,  சமூக சேவகர் பாலா மற்றும் பிக் பாஸ் புகழ் அமுதவாணன் ஆகியோர்  இன்று அவர்கள் குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர்,  பம்மல்,  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் என 200 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.2,00,000 லட்சத்தை நடிகர் பாலா யாரிடம் நன்கொடை பெறாமல் தனது சொந்த பணத்தை நிவாரண உதவித் தொகையாக வழங்கி வருகிறார்.

Actor KPY Bala:
 
இதுகுறித்து பாலா தெரிவித்ததாவது: என்னை வாழ வைத்த ஊர் சென்னை தான். மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய ஆசைப்பட்டேன். என்னுடைய வங்கிக் கணக்கில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இருந்தது. என்னுடைய சொந்த தேவை மற்றும் வீட்டு வாடகை கொடுப்பதற்காக 25 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 2 லட்சத்தை மக்களுக்கு கொடுத்து விட்டேன். யாரிடமும் நன்கொடையோ எதுவும் பெறவில்லை முழுக்க முழுக்க இது அனைத்தும் என்னுடைய பணம்தான். நான் உதவி செய்து வரும் இந்த பகுதியில் தான் சென்னைக்கு வந்த பொழுது முதன் முதலில் தங்கி இருந்தேன். எனவே அவர்களுக்கு என்னால் முடிந்த மிகச் சிறிய உதவியை செய்து இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

Actor KPY Bala:

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தனது தாக்குதலை தொடுத்து விட்டு சென்றது. இதில் சூறைக்காற்றுடன் கிட்டதட்ட 24 மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்ததால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீருக்கு பிரபலங்களும் தப்பவில்லை. தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்ததாக நடிகர் விஷால், நடிகை கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

Actor KPY Bala:

இப்படியான நிலையில் சந்தோஷ் நாராயணன் கடுமையாக புகார் ஒன்றை எக்ஸ் தளத்தில் வாயிலாக முன்வைத்துள்ளார்.  அதில், “தொடந்து 10 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சில வாரங்கள் வரை குறைந்தது முழங்கால் அளவு தண்ணீர் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குறைந்தப்பட்சம் 100 மணிநேரம் மின்வெட்டு என்பது கசப்பான  உண்மை நிலவரமாகும். இந்த ஆண்டு புதிய திட்டங்கள் கையாளப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், கொளப்பாக்கம் என்று பெயரிடப்பட்ட எங்கள் பகுதி வரலாற்று ரீதியாக ஒரு ஏரியோ அல்லது 'தாழ்வான' பகுதியோ அல்ல.

நான் எங்கு சென்றாலும் காணும் நெகிழ்ச்சியான சம்பவங்களுக்காவும், பாசிட்டிவான எண்ணங்களாகவும் சென்னை மக்களின் மனதை பாராட்டுகிறேன். இதன்மூலம் தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட நீங்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என தெரிவிக்கிறேன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather Update: நெருங்கும் புயல்; 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: நெருங்கும் புயல்; 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Embed widget