Cyclone Mandous: விட்டு விட்டு அடிக்கும் மாண்டஸ் மழை...! நாளையும் கன மழை இருக்கு... இது புதுசு...!
மாண்டஸ் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பகுதியில் மாமல்லபுரத்தில் ஒட்டி கரையை கடக்க கூடும்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு:
மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலு இழந்து தற்போது சென்னையில் தென்கிழக்கு 260 கிலோமீட்டர் தொலைவிலும் இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும்.
அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையிலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்.டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்யும்.நாளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றுக்கான எச்சரிக்கை - வட தமிழகம் கடற்கரையை பொருத்தவரையில் காற்று வேகமாக வீசப்படும்.
நாளை காலை நேரத்தில் அதிகாலை முதல் 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் அது மெல்ல மெல்ல குறைந்து நாளை மாலை 30 முதல் 40 சமயங்களில் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும். தென் தமிழக கடலோர பகுதிகளில் மன்னர் வளைகுடா பகுதியில் காற்று அதிகமாக இருக்கும். மீனவர்கள் பத்தாம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த மூன்று மணி நேரத்தில் வலுவிழக்குக்கூடும்.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-12-09-13:07:47 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுராந்தகம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/zfy1urB7LZ
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 9, 2022
மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்கள் எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைகள் மற்றும் மன்னார் வளைகுடா, இலங்கைக் கடற்கரையை ஒட்டி பகுதிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள இந்திய கடலோர காவல்ப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.