மேலும் அறிய

கடலூர்: நிகழ்ச்சிக்கு வர ஆட்சியர் தாமதம்-அலுவலக வாயிலில் படுத்துறங்கிய அங்கன்வாடி பணியாளர்கள்

’’ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள புற்களில் படுத்து உறங்க தொடங்கினர். பின் நான்கு மணி நேரத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் வந்து விழாவினை தொடங்கி வைத்தார்’’

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்த வருடத்திற்கான தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது, இந்த விழா "ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்" எனும் வாக்கியத்தினை மையமாக கொண்டு அனைத்து ஊர்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கடலூரில் அதனை கொண்டாடுவதற்கு என அங்கன்வாடி சிறுவர்கள் மற்றும் விழிப்புணர்வு பேரணிக்கு என அங்கன்வாடி பணியாளர்கள்  ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதன்படி அவர்கள் அனைவரும் காலை 7 மணி அளவிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வர நேரம் ஆனதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள சாலை மரத்தடியிலும், ஆட்சியர் அலுவலக வாசலில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்து காத்து கொண்டிருந்ததை காண முடிந்தது. 


கடலூர்: நிகழ்ச்சிக்கு வர ஆட்சியர் தாமதம்-அலுவலக வாயிலில் படுத்துறங்கிய அங்கன்வாடி பணியாளர்கள்

இதுமட்டும் இன்றி பேரணிக்கு வந்து இருந்தவர்கள்  ஒரு சிலர் வயது முதிர்ந்தவர்கள் என்பதால் வெகு நேரம் காத்திருந்த காரணத்தினால் ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள புற்களில் படுத்து உறங்க தொடங்கினர். பின் அழைத்து வரப்பட்ட சிறுவர்கள் முகாக்கவசம் அணியாமல் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டமாக அமர வைக்கப்பட்டிருந்தனர். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பொது வெளியில் குழந்தைகளுக்கு முகக்கவசம் கூட அணியாமல் அமரவைத்திருப்பது வருத்தத்திற்குரியதாகும் பின் நான்கு மணி நேரத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வந்து விழாவினை தொடங்கி வைத்தார்.


கடலூர்: நிகழ்ச்சிக்கு வர ஆட்சியர் தாமதம்-அலுவலக வாயிலில் படுத்துறங்கிய அங்கன்வாடி பணியாளர்கள்

இதில் போஷன் உறுதிமொழி என பல உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் வலியுறுத்தப்பட்டது அவை, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையை அடைய நான் இன்று உறுதிமொழி ஏற்கின்றேன். ஊட்டச்சத்து குறித்த இருவார நிகழ்வுகளின் போது ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பத்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதை நான் உறுதி செய்வேன். ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான ஆரோக்கிய உணவு, தூய்மையான குடிநீர், சுகாதாரம் தாய்மை மற்றும் பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான சரியான உணவு ஊட்டும் பழக்க வழக்கங்களில் உள்ளது. தேசிய ஊட்டச்சத்து இயக்கம் நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற ஒவ்வொரு வீடு, கிராமம் ஒவ்வொரு நகரமும் சம்பந்தமன கருத்துக்களை அறிய நான் உதவுவேன்.

கடலூர்: நிகழ்ச்சிக்கு வர ஆட்சியர் தாமதம்-அலுவலக வாயிலில் படுத்துறங்கிய அங்கன்வாடி பணியாளர்கள்

இந்த மக்கள் பேரியக்கத்தின் குணம் எனது நாட்டிலுள்ள எனது சகோதரிகள் சகோதரர்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாகவும் திறமையானவர்களாகவும் உருவெடுப்பர். இது என் உறுதி மொழி ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான தேசமாகும் என கூறினார். இவ்வாறு வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் சரியான நேரத்தில் எங்களை அழைத்தால் தாங்கள் இவ்வாறு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது என வருத்தம் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!
லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து,மாஸ்டர் பிளான்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
Rain Alert TN: இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?
இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget