மேலும் அறிய
கருப்பா மிதந்தாலே முதலையா? கூடுவாஞ்சேரியில் முதலை வதந்தி..! உண்மை என்ன?
செங்கல்பட்டு மாவட்டம் (GST road) வல்லாஞ்சேரி கூட்ரோட்டில் முதலை வந்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் நேற்று ஊரப்பாக்கம் பகுதியிலிருந்து கூடுவாஞ்சேரி வரை தன்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது இதனால் போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது. அதிகளவு நீர் சென்றதால் சாலையோரத்தில் இருந்த பொதுமக்கள் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்தனர். அவ்வாறு ஒருவர் வீடியோ எடுத்து கொண்டு இருக்கும்போது முதலை போன்ற ஒரு உருவம் இருந்துள்ளது அதை கூடுவாஞ்சேரியில் முதலை என சமூக வலைத்தளத்தில் வீடியோவை பரப்பி வந்தனர்.
இந்நிலையில், சில சமூக வலைதள ஊடகங்களில் முதலை என செய்திகள் வெளி வரவே பொது மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ரகுநாத் இடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, செங்கல்பட்டு மாவட்டம் (GST road) வல்லாஞ்சேரி கூட்ரோட்டில் முதலை வந்ததாக தவறானதகவல் பரப்பப்பட்டு வருகிறது.அது மரக்கட்டை, GST சாலையில் தண்ணீர் ம் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை மிதந்ததை முதலை என வதந்தி பரப்பி வருகின்றனர் என்றார்
சென்னை GST ரோட்ல முதலை ஒன்னு சுத்திக்கிட்டு இருக்கு
👀😱 pic.twitter.com/8yzkgJjLyc
கூடுவாஞ்சேரியில் முதலை என பரவும் வீடியோ வதந்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விளக்கம் @imanojprabakar @SRajaJourno pic.twitter.com/ENxeqChvQa
— Kishore Ravi (@Kishoreamutha) November 28, 2021 ">மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion