மேலும் அறிய
Advertisement
கடலூர் அருகே ஓடும் ரயிலில் தகராறு...! - திடீரென மயங்கி விழுந்து இறந்த இளம் பெண்ணால் பரபரப்பு...!
’’தந்தை அண்ணாமலையிடம் தகராறு செய்த நிலையில் இதை பார்த்த மகேஸ்வரி, அந்த நபரை தட்டிக்கேட்டுள்ளார்’’
சென்னை தண்டையார்பேட்டை ராஜசேகர் நகரை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு 3 வயதில் உமேஸ்பவின் என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி திருமணம் முடிந்த தனது தங்கையை மறுவீட்டுக்கு அழைத்து வருவதற்காக மகேஸ்வரி, திருவொற்றியூர் கார்கில் நகரில் வசித்துவரும் தனது தந்தை அண்ணாமலை, தாய் கல்யாணி ஆகியோருடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து நேற்று மாலை 4 மணி அளவில் திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தார். அந்த ரயில் செங்கல்பட்டு வந்ததும், அந்த பெட்டியில் 4 பேர் ஏறினர். அதில் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட மேல் இருக்கையில் அமராமல், மகேஸ்வரி தந்தை அண்ணாமலை இருந்த கீழ் இருக்கைக்கு அருகில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
இதற்கிடையில் அந்த ரயில் விழுப்புரம் வந்ததும், அந்த மேல் இருக்கைக்கு அவருடன் வந்த 3 பேரில் ஒருவர் சென்று படுத்தார். இதை பார்த்த அண்ணாமலை உங்கள் இருக்கையில் உங்களுடன் வந்த நபர் ஏறி விட்டார். ஆகவே எனது இருக்கையை விட்டு எழுந்து செல்லுங்கள். நாங்கள் சாப்பிட போகிறோம் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் செல்ல முடியாது என்று அண்ணாமலையிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதை பார்த்த மகேஸ்வரி, அந்த நபரை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், அண்ணாமலையை தாக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதை பார்த்த மகேஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார். அவரை அண்ணாமலை, அவரது தாய் கல்யாணி எழுப்பினர். ஆனால் அவர் மூச்சு, பேச்சு இல்லாமல் இருந்தார். இதையடுத்து ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் அந்த ரயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் தயாராக இருந்தது. அந்த ஆம்புலன்சில் மகேஸ்வரியை ஏற்றி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மகேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட அண்ணாமலை, இவரது மனைவி கல்யாணி ஆகிய 2 பேரும் கதறி அழுதனர். பின்னர் இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடலூர் முதுநகர் ரயில்வே காவல் துறையினரும் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் ஏற்பட்ட தகராறில் பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion