மேலும் அறிய
Advertisement
காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் 1,460 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது...!
’’மது மற்றும் அசைவம் சாப்பிடுபவர்கள் ஞாயிறு தடுப்பூசி முகாமை புறக்கணித்த நிலையில் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் மாற்றம்’’
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் முழு வீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அசைவ உணவு மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்று கிழமை தடுப்பூசி முகாமில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவது அரசின் கவனத்திற்கு சென்றதால் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்களை மாற்றியது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 7ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அனைத்து வட்டாரத்திலும் நடைபெற்றது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போடுவதற்காக செவிலியர்கள், தகவல்களை பதிவிட தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பயனாளிகளை அழைத்துவர சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சி துறை, வருவாய் துறையினை சார்ந்த பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 முகாம்களும், 910 முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 ஆயிரம் பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 2 ஆவது தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் 2ஆவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முதல் தவணையினை போடாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொண்டு தங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக மாவட்டத்தில் 2ஆம் தவணை தடுப்பூசி போடாதவர்கள் இத்தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7ம் கட்ட கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடை பெற உள்ளது. இம்முகாமில் 2320 சுகாதாரப் பணியாளர்கள், 667 முன்களப் பணியாளர்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி, செவிலியர் பயிற்சிபள்ளி மாணவர்கள் 1055 பேர் பங்கேற்கின்றனர். இம்முகாமில் இதுநாள் வரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் மற்றும் 2ம் தவணை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற (30.01.2021) சனிக்கிழமை அன்று 7 வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அனைத்து வட்டாரத்திலும் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்களின் அறிவிப்பு pic.twitter.com/rmHrqdAVBz
— District Collector Kancheepuram (@KanchiCollector) October 29, 2021
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
தொழில்நுட்பம்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion