மேலும் அறிய

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா-  வேகமாக பரவக்கூடிய தொற்று என எச்சரிக்கை!

‛‛சென்னையில் 370 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிருக்கு அச்சம் இல்லை என்றாலும், இந்தத் தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டிது அவசியம்,’’ -மா.சுப்பிரமணியம்

கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்து, தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், மீண்டும் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தலைதூக்க ஆரம்பித்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி, சென்னையில் மட்டும் 370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் இருந்து சிசிக்சைப் பெற்று வருகின்றனர். 

அண்மையில்கூட, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். அதிலும், தமிழகத்தில் தலைநகர் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், மெல்ல, மெல்ல கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், எச்சரிக்கையாக இருந்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி கூறியிருந்தார்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா-  வேகமாக பரவக்கூடிய தொற்று என எச்சரிக்கை!

இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரே வீட்டில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ளோருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தச்சூழலில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, சுகாதாரத்துரை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கினர். 

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் 370 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகை கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், இந்தத் தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டிது அவசியம் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். 

மேலும், சென்னை மற்றும் அதன் புறநகரில் உள்ள 4 கல்லூரி மாணவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அந்த இடங்களில் நோய் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார், 

மேலும், தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனாவால்  பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் மிதமான பாதிப்பே இருப்பதால், யாரும் பதட்டம் அடையத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில், தற்போது கூடுதல் கவனத்துடன் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

தற்போது வீடுகளில் இருவர் மற்றும் அதற்கு மேலும் ஏற்படும் “கிளஸ்டர்” தொற்றை கவனத்தில் கொண்டு, கூடுதல் நடவடிக்கைள் எடுக்கப்பட்டு  வருவதாகவும் அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது ஏற்படும் தொற்று பரவல் குறித்து பெரிய அளவில் அச்சம் தேவையில்லை என்றாலும், உரிய முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முகக் கவசம், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தி உள்ளனர். 

இதற்கிடையே, சென்னையில் தற்போதைய நிலையில் 15 இடங்கள் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?
IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?
IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு
Embed widget