ஓடும் ரயிலில் ஏற்பட்ட விபரீதம்.. ஓட்டநரின் சாமர்த்தியதால் உயிர் தப்பிய ரயில் பயணிகள்
ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் ரயிலை நடைமேடையில் நிறுத்தியதால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் விரைவு ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்பு திருவள்ளூர் அருகே துண்டாகியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். ஓட்டுநரின் சாமர்த்தியதால் ரயிலை நடைமேடையில் நிறுத்தியதால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து 12673 என்ற எண் கொண்ட சேரன் விரைவு ரயில் புறப்பட்டு திருவள்ளூர் அருகே இரவு 11 மணிக்கு சென்ற போது S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது.இதனால் ரயிலில் பயணித்த ரயில் பயணிகள் பயத்தில் அலறினர் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-வது மேடையில் ரயில் சென்ற போது திடீரென்று இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி துண்டிக்கப்பட்டு பலத்த சத்தம் கேட்டதால் ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.எனினும் ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.இதனால் ரயில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பின்னர், சென்னை பெரம்பூர் கேரேஜில் இருந்து இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைக்கப்பட்டு அவை விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பின் அரக்கோணம் மார்க்கமாக கோவைக்கு புறப்பட்டு சென்றது.