1 லட்சம் பேர்.. AI கற்றல் மையம்.. சிறுசேரியில் சம்பவம்.. களத்தில் இறங்கிய Cognizant நிறுவனம்..!
Cognizant: காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் 14 ஏக்கரில், வருடத்திற்கு ஒரு லட்சம் பேர் பயன்பெறும் வகையில் கற்றல் மையத்தை உருவாக்க உள்ளது.

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் முன்னணி தனியார் நிறுவனம் ஆகவும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழக அரசின் முக்கிய திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, கவனத்தை ஈர்த்து வருகிறது.
காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம்
அந்த வகையில் காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் சென்னையில் தனது வளாகத்திற்குள், கற்றல் மையத்தை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் வருடத்திற்கு ஒரு லட்சம் நபர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அடுத்த சிறுசேரியில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சிறுசேரியில் உள்ள தனது வளாகத்தில், 14 ஏக்கர் பரப்பளவில் கற்றல் மையத்தை அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் அடுத்த மூன்று ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 14 ஆயிரம் இருக்கையில் கொண்டதாக இந்த கற்றல் மையம் அமைய உள்ளது. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் உள்ளது.
என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்படும் ?
இந்தக் கற்றல் மையத்தின் மூலம் பணியாளர்களுக்கு நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி இதேபோன்று ஸ்டார்ட் அப் வகுப்பறைகள், இன்குபேட்டர் மையங்கள், வாடிக்கையாளர் அனுபவ இடங்கள், வடிவமைப்பதற்கான சிந்தனை இடங்கள் ஆகியவை இதில் அமைய உள்ளன. இதேபோன்று இந்த மையம் கோவை, பூனை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் அமைக்க உள்ள கற்றல் மையங்களுக்கு உறுதுணையாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்த கற்றல் மையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்போது, கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து புதிய ஆராய்ச்சி மற்றும் கற்றல் திட்டங்களில் பங்கேற்க முடியும். இதுபோன்ற கற்றல் திட்டங்களில் பங்கேற்று, தொழில்துறை முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

