இனி ஓ.எம்.ஆர். சாலையில் ஈசியா போலாம்; சென்னையின் முதல் ’U’ வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்..!
இதன் மூலம் ஓ.எம்.ஆர் செல்லும் ராஜீவ்காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் ரூபாய் 108.13 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ’U’ வடிவ மேம்பாலத்தை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்த ’U’ வடிவ மேம்பாலம் சென்னையில் கட்டப்பட்டுள்ள முதல் ’U’ வடிவ மேம்பாலம் ஆகும். இதன் மூலம் ஓ.எம்.ஆர் செல்லும் ராஜீவ்காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சென்னையில் உள்ள மிகவும் முக்கியமான தொழில் இடங்களில் ஓ.எம்.ஆர் சாலையும் ஒன்று. இங்குள்ள ஐ.டி. நிறுவனங்கள் சென்னையின் மிகவும் மதிப்பு மிக்க இடங்களில் ஒன்றாக ஓ.எம்.ஆர் சாலையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் இந்திரா நகர் சந்திப்பு பகுதியில் இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையம் உள்ளது. இந்த பறக்கும் ரயில் நிலையத்திற்கு அருகே ரூ.108 கோடி மதிப்பில் 'U' வடிவ மேம்பாலம் அமைக்கும் பணிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்த 'U' வடிவ மேம்பாலம் 40 அடி இடைவெளியில் மொத்தம் 20 தூண்களைக் கொண்டு 25 அடி அகலத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இருபுறமும் 120 மீட்டர் நீள பக்கவாட்டு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பால கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் இந்த மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார். சோழிங்கநல்லூர் திசையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்காமல் இந்திராநகர் மேம்பாலம் வழியாக ஏறி, யூ- டர்ன் செய்து, இந்திராநகர், அடையாறு மற்றும் திருவான்மியூர் செல்ல ஏதுவாக இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கியமான மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளில் ஓ.எம்.ஆர் இந்திரா நகர் சாலையும் ஒன்று. குறிப்பாக இந்திரா நகர் சிக்னலில் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 13 ஆயிரம் வாகனங்கள் கடப்பதால் தற்போது கட்டப்பட்டு மக்கள் பயன்படிற்காக திறக்கப்பட்டுள்ளதால் இந்திரா நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.