சொதப்பிய வொண்டர்லா... சமூக வலைதளத்தில் கதறவிட்ட மக்கள்... சரணடைந்த நிர்வாகம்... பாஸ் அறிவிப்பு..
Chennai Wonderla: "வொண்டர்லா பூங்காவில் ரெய்டுகள் வேலை செய்யவில்லை என்ற புகாருக்கு, நிர்வாகம் வருத்தம் தெரிவித்ததுடன் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு பாஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"

"சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், வொண்டர்லா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது"
சென்னை வொண்டர்லா - Chennai Wonderla
வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் பொழுதுபோக்கு பூங்காவை, சென்னை புறநகரில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட, பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் என்ற பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக, பொழுதுபோக்கு அமைத்துள்ளது. சுமார் 611 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொழுதுபோக்கு பூங்காவை கடந்த டிசம்பர் 01 தேதி திறந்து வைக்கப்பட்டது.
புலம்பித் தீர்த்தப் பொதுமக்கள்
டிசம்பர் 2-ஆம் தேதி வொண்டர்லா பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பூங்கா பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. முதல் நாளே பெரும்பாலான ரைடுகள் முறையாக செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். பல ரைடுகள் பாதி வழியிலேயே நின்றதால், பொதுமக்கள் அச்சமடைந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பல ரைடுகள் பாதியில் நின்று தான் பொதுமக்கள் அந்தரத்தில் தொங்கிய வீடியோ காட்சிகளும் வெளியாகியாச்சு ஏற்படுத்தி இருந்தது.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில், வொண்டர்லா முதல் நாள் அனுபவத்தை பகிர்ந்து இருந்த பொதுமக்கள், இவ்வளவு மோசமான அனுபவத்தை இதுவரை பார்த்ததில்லை. இவ்வளவு பிரச்சினைகளை வைத்துக்கொண்டு ஏன் போங்காவை இவ்வளவு வேகமாக திறந்தார்கள் என கேள்வி எழுப்பி வீடியோக்களை பதிவு செய்திருந்தனர். ஒரு சிலர் நாங்கள் பாஸ்ட் ட்ராக் டிக்கெட் மூலம், கிட்டத்தட்ட ஒருவருக்கு 3500 வரை செலவு செய்து சென்ற பின்னும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.
நாள் ஒன்றுக்கு சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில், 6500 பேர் வரை கையால முடியும் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முதல் நாள் 2000 பேர் வந்திருந்த போதும் அந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல், ஊழியர்கள் அவதிப்பட்டனர். முதல் நாளே இவ்வளவு மோசமான அனுபவம் அமைந்ததால், சமூக வலைதளத்தில் ஏராளமான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
நிர்வாகம் விளக்கம் என்ன ?
பொது மக்களின் சரமாரி விமர்சனங்களுக்கு பிறகு, வொண்டர்லா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வீடியோவை வெளியிட்டுள்ளார். வொண்டர்லா பூங்கா பாதுகாப்பானது,, மின் தடை காரணமாகவே பிரச்சனை ஏற்பட்டதாக நிர்வாகம் சார்பில் அதன் இயக்குனர் வெளியிட்ட வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முதல் நாளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புதிய திட்டத்தை நிர்வாகம் அறிவித்துள்ளது. WONDERCARE PASS வழங்க ப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் இரண்டாம் தேதி வந்த அனைவருக்கும் இந்த பாஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பாஸை 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஆறுதல் தகவலையும் வெளியிட்டுள்ளது.





















