Chennai Traffic Diversion: வாகன ஓட்டிகளே அலர்ட்...நாளை முதல் இந்த ரூட்ல போகமுடியாது...நோட் பண்ணிக்கோங்க!
சென்னை அண்ணா சாலை - ஜீ.பி. சாலை, மயிலாப்பூர் சாய் பாபா கோயில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Chennai Traffic Diversion: சென்னை அண்ணா சாலை - ஜீ.பி. சாலை, மயிலாப்பூர் சாய் பாபா கோயில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள், சாலை விரிவாக்க பணிகள் என ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது அண்ணா சாலை, மயிலாப்பூர் சாய் பாபா கோயில் சாலை உள்ளிட்ட இடங்களில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
எந்தெந்த இடங்கள்?
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "சென்னை அண்ணாசாலை - ஜீ.பி. சாலையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசாலைத் தவிர்க்க வரும் 27.08.2023 முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜி.பி. சாலையில் இருப்புறமும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றது. மேற்கண்ட சாலையில் இருப்புறமும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள்கள் கடை அமைந்துள்ளதால், நாள்தோறும் அதிகப்படியான மக்கள் மேற்கண்ட சாலைக்கு வருகைபுரிவதால் மேற்கண்ட சாலையில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் உள்ளது. எனவே அண்ணாசாலை ஜீ.பி. சாலையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- வெஸ்ட் காட் சாலையில் இருந்து வரும் MTC வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திருப்பி விடப்பட்டு வைட்ஸ் ரோடு சாலை, ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம். மேற்கண்ட வாகனங்கள் ஜீபி சாலை வழியாக அண்ணாசாலை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் ஜீ.பி. சாலை வழியாக அண்ணாசாலை அடையலாம்.
- மேலும் ஜீபி சாலை வழியாக அண்ணாசாலைக்கு அனுமதிக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் வலது பக்கம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாக செல்ல தடைசெய்யப்பட்டு, இடது பக்கம் திரும்பி அண்ணாசாலை, ஸ்பேன்சர் சந்திப்பில் யு திருப்பம் செய்து அண்ணாசாலை, டேம்ஸ் அனுமதிக்கப்படும்.
- அண்ணாசாலை - வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் ஜீபி சாலையில் அனுமதிக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக்குண்டு வழியாக செல்லலாம்.
- அண்ணாசாலை - வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் வாகனங்கள் ஜீ.பி சாலை சந்திப்பில் யு திருப்பம் செய்ய தடைசெய்யப்பட்டு, நேராக அண்ணாசாலை, ஸ்பேன்சர் சந்திப்பில் யு திருப்பம் செய்து அண்ணாசாலை, டேம்ஸ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.
- ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து ஜீ.பி சாலை நோக்கி வரும் வாகனங்கள் டேம்ஸ் சாலை பிளாக்கர்ஸ் சாலை வழியாக சென்று ஜீ.பி சாலை அடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.